பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 47
களையும் பயிர்தான்! காக்கையும் கிளிதான்!
தத்துப் பித்தென் எழுதித் தள்ளலாம்!
30
எத்திப் பிழைத்திட எவரும் முன் வரலாம்!
குடியன் உளறலும் கோணையன் மொழிவதும்
தடியர் பிதற்றலும் தவளைக் கூச்சலும்
அழகு மங்கை ஆடை களைவதும்
பழகு தமிழில் பக்கம் பக்கமாய்
35
எழுதித் தள்ளலாம்? இழிவென்ன இழிவு?
புழுதிக் கருத்துகள் பொல பொல வென்று
நந்தமி ழகத்தின் எழுதுவார் நாவில்
வந்து மொழிவதும் இலக்கிய வளர்ச்சியே!
'பிடித்த'தைப் 'பிடிச்ச'தென் றெழுதலாம் இனிமேல்!
40
‘பெற்ற தைப் 'பெத்த' தென் றெழுதலாம் இனிமேல்!
‘போன'தைப் ‘போச்'செனப் புகலலாம் இனியே!
‘வேண்டு' மென்பதை ‘வேணு மென் றெழுதலாம்!
மொத்தமாய்க் கூட்டிக் கழித்து மொழிந்தால்
முத்துச் சண்முகம் கருத்துப் படியினி
45
அத்திம்பேர் அம்மாமித் தமிழே இலக்கியம்!
முத்தமிழ் வளர்ச்சியைப் பாருங்கள் தமிழரே!
முத்துச் சண்முகம் மூதறி வாளன்(!)
திக்குவாய்த் தமிழன் தெ. பொ. மீ.யின்
தக்கநல் லடியான்; அவன் தாள் பிடிப்பவன்!
50
படித்தவன்; படித்துப் பட்டம் பெற்றவன்;
நடிப்பவன் தமிழ் நலம் நாடுவான் போல;
மொழிநலம் பேணும் மொழியா சிரியன்!
இழிவு அவனுக்கா, தமிழர்க்கே என்க!
மெய்யாய்ச் சொல்லுவேன் முத்துச் சண்முகம்
55
வையா புரியின் வகையிலோர் புது ஆள்!
கழிசடை நாயும் கண்டதை உணாதே!
இழிவுற அவனோ எதையும் உண்பவன்!
இத்தகை யான இழிந்த பிறவிகள்
முத்தமிழ் நலத்தை முழுவதும் அழிக்கப்
60