பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146 / அயோத்திதாசர் சிந்தனைகள்

(சாத்துக்காப்பென்னும்) கைபூஜையோ, கால்பூஜையோ, துடைப்புக்கட்டைப் பூஜையோ பெற்றுக்கொண்டும், பணத்தால் பெரியசாதியென்றுயர்த்திக் கொண்டிருந்த போதிலும் இந்த லாகிரியை அருந்தியவுடன், “குலத் தளவே யாகுமாங்குணம்” என்னும் பழமொழிக்கிணங்க பூர்வ மிலேச்சகுல குணத்தை வெளிக்கு விசிரிம்பித்து யாவர் புத்திகூறினும் அடங்காது ஈன்று வளர்த்தத் தாயார் வெறுக்கவும், தனதுமனைவி இக்கொடிய பாதகன் முகத்திலும் விழிக்கப்போமொவென்று அகலவும், இவன் சுரணையற்றநிலை கண்டோர்கள் யாவருங் கைகொட்டி நகைக்கவும் உள்ள சொத்துக்கள் யாவையும் விற்றுக் குடித்து குடிகேடனென்னும் பெயருமெடுத்துக் கடைசியாகப் பிச்சையிரக்க வெளிதோன்றியும் பிச்சைக்கிடைக்காதலையும் பெரும் பாதகனாகிவிடுகின்றான்.

இந்த லாகிரி வஸ்து பாவங்களுக்கெல்லாம் தலையானதென்று அறிந்து மற்றுமொருவன் சுவாமிப்பிறந்த நாள் ஒன்றில்தான் குடிப்பேனென்கின்றான். இன்னொருவன் முநியாண்டவன் பூசையன்று தான் குடிப்பேனென்கின்றான். வேறொருவன் சத்திபூசை செய்யும்போதுதான் நான் குடிப்பேனென்கின்றான். இவர்களே சுவாமி கும்பிடுவதில் முதல் பாவிகளாய் இருக்கின்றார்கள். எவ்வகையிலென்னில், இலாகிரியை அருந்தி மயக்குண்டு மதிகெடுவது பஞ்ச பாதகத்துள் ஒன்றென்றறிந்தும் அத்தகையப் பாவச்செயலை சுவாமிப்பிறந்த நாளைக் கொண்டாடச்செய்தேனென்றும், முனியாண்டவன் பூசைப் போடச் செய்தேனென்றும், சத்தி பூசைப் போடச்செய்தேனென்றும் சொல்லுவதினால் அன்னோர் தொழுஉம் சுவாமிகளே இவர்கள் பாவத்திற்கு முதற்பீடமாக விளங்குகின்றது. சுவாமிப் பிறந்தாரென்னும் நாளைக் கெண்டாடுவதற்கு அன்று பாவத்திற்குப் பீடமாம் இலாகிரியைப் பானஞ்செய்யாமல் ஒழித்து தெளிவிலிருப்பானாயின் அவனைப் புண்ணியவழித் தேடுவோன் என்னலாம். முனியாண்டவனைக் கும்பிடுபவன் அன்று லாகிரி அருந்தாமற் கும்பிடு வானாயின் அவனைப் புண்ணியவழித் தேடுவோன் என்னலாம். சத்திபூசைசெய் பவன் அன்று குடியாமல் சுத்தநிலையில் இருப்பானாயின் அவனைப் புண்ணியத்தின் சுத்தவழித்தேடுகின்றான் என்னலாம். அங்ஙனமின்றி சாமிப் பிறந்தாரென்று சாராயப் புட்டியைத் திறப்பதும், முநியாண்டவன் பூசையில் சனியன் பிடித்தக் கள்ளைக் குடிப்பதும், சத்தி பூசையில் அசுத்தமாங் கள்ளு சாராயத்தைக் கலந்து குடிப்பதுமாகியப் பாவச்செயல்களுக்கு கும்பிடுஞ் சாமிகளையே காரணபூதங்களாக ஏற்றுக் கும்பிடுதலை ஒழித்து பாவத்தைப் போக்குவதழகாம். மேலுமேலும் பாவத்தை பெருக்குதற்குக் கும்பிடு தெய்வங்களே கூட்டாளிகளாக விருக்குமாயின் அவர்களுக்கு சதா துக்கமென்பதே சான்றாம்.

பின்கலை நிகண்டு - பஞ்ச அங்கங்களும் பஞ்சபாதங்களும்

பஞ்சாங்கம் திதியே வாரம் பகர்ந்தநாள் யோகத்தோடு
துஞ்சாத கரணமென்ப சூழ்கொலை களவு பொய்யும்
அஞ்சாது கள்ளருந்தல் ஆர்குரு நிந்தையென்ப
பஞ்சார் மெல்லடி நல்லாய் கேள் பஞ்சபாதகத்தின் பேரே.

திரிக்குறள்

ஈன்றாண்முகத்தேயு மின்னாதாலென் மற்றுச்
சான்றோர் முகத்துக்களி.
நாணென்னு நல்லாள் புறங்கொடுக்குங் கள்ளென்னும் பேணாப்பெருங்குற்றத்தார்க்கு.

- 4:12; ஆகஸ்டு 31, 1910 –


55. பௌத்த தன்ம யாகங்கள்

வினா : ஐயமின், தாம் தமது பத்திரிகையில் வரைந்துவரும் சங்கதிகளில் சைவம், வைணவம், வேதாந்தமென்னும் விஷயங்கள் யாவற்றிற்கும் ஆதாரபீடம் புத்ததன்மமென்றே வரைந்து வருகின்றீர். அங்ஙனமாயின் அவர்களுட் சிலர் யாகம் யாகமென்று கூறி மாடுகளையும், குதிரைகளையும், சுட்டுத் தின்றதாக வரைந்து வைத்துக்கொண்டிருக்கின்றார்களே அவைகளும் புத்ததன்மங்களைச்