உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இயல்பாகவே தமிழ் இலக்கியத்திலும் வரலாற்றிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளவர் டாக்டர் கமால் என அறிகிறேன். ஏராளமான இலக்கியச் சான்றுகளையும், ஆவணங்களையும், கல்வெட்டு, செப்பேடு ஆகிய வரலாற்றுத் தடயங்களையும் சேகரித்து இந்தத் தொகுப்புரையை சிறப்பாக வரைந்துள்ளார்கள். அவருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆய்வுப்பணிகள் தொடர்ந்து சமுதாயத்திற்கு பயன்பட விழைந்து வாழ்த்துகிறேன்.

மேலும், தமிழக இஸ்லாமியர்களைப் பற்றி இதுவரை வெளிவந்துள்ள வரலாற்று நூல்களில் இருந்து இந்த நூல், முழுமையும் வேறுபாடான ஆய்வு நோக்கில் வரையப்பட்டிருப்பதை இந்த நூலினைப்படிக்கும் யாரும் எளிதில் உணர முடியும். இந்த நூல் நமது தமிழக வரலாற்றின் ஒரு பகுதியாக அமைந்துள்ளதால் இதனை அனைத்து நிலைகளில் உள்ள மக்களும் படித்து பயன் பெறுவதற்கு ஏற்றவாறு, இந்தத் தொகுப்புரையை எங்கள் அறக்கட்டளையினர் நூல் உருவில் இப்பொழுது அச்சிட்டு வெளியிடுகின்றனர். இதனால் தமிழக வரலாறு செழுமையும் சிறப்பும் எய்தும் என்பதில் ஐயமில்லை.

கே. டி. எம். எஸ். அப்துல்காதிர்

சென்னை – 6

ஜமாவி தைக்காவாப்பா

20–12–1990

தலைவர், சீதக்காதி அறக்கட்டளை.