பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40


இப்பொழுது உத்தேசிக்கப்பட்டிருக்கும் பெரிய செய்குளம் கட் டுகிறவரையில், நமது கடலில் ஏராளமாயிருக்கும் இலட்சக்கணக்கா ன சிறிதும் அதிக வேடிக்கையானதுமான சிறு மீன்களை யெல்லாம் கொண்டு வைத்துக்காட்ட இடம் போதாது. தற்காலம், மிக அழகான நிறங்களையுடைய கடல் அர்ச்சின என்று சொல்லப்பட்ட கடல் பல்பப் பூச்சிகள் (Sea urchins), நட்சத்திர மீன்கள் (Starfishes), கடல் அட்டை (Sea-cucumber) கள் முதலிய அநேக கடல் ஜந்துக்களில் எதையும் வைப்பதற்கு இடமில்லை. பாம்பனிலும், தூத்துக்குடியி லும் உள்ள பவளக்குன் றில் விர்த்தியாகும் மிக அழகான பவளங்கள் தினுசுகளை வைத்துக்காட்டவும் முடியவில்லை. கடல்விசிரி (Seafans), கடல் பேனா (Sea-pens), கொரலினிஸ் (Corallines) முதலி யவைகளில் எதையும் வைப்பதற்கு குளங்களில் இடமில்லை. இப் படியிருக்க புசல் அடிக்குங்காலத்தில் கரையில் தள்ளப்படும் அபூர்வ மான மிதந்து வசிக்கும் ஜந்துக்களுக்கும், சொரிமீன்களுக்கும் இட முண்டோ ! இப்பொழுது இருக்கும் செய்குளங்களில் வைக்கப்பட்டிருக்குங் கடல்வாழும் பிராணிகளைக்கொண்டு, மிகவும் பெரிய விஸ்தாரமான கட்டடம் கட்டியபின்பு அதில் வைக்கப்போகும் அபூர்வகாட்சியின் மேன்மைகளுக்கு இதை ஒரு முன்னறிவிக்கும் குறியாய் தெரிந்து கொள்ள வேண்டியது.


கொசுப்புமுவை தின்னும் ஒரு உபயோகமுள்ள நல்ல தண்ணீர் மீன். MADRAS: PRINTED BY THE SUPERINTENDENT, GOVERNMENT PRESS.