பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோ.க.சுப்பிரமணிய முதலியாரவர்களுக்கு எழுதிய பாக்கள்.

சீர்செப் பரியபல சேர்செந்தூர்க் கந்தனை
நேர்சுப் பிரமணிய நேயநின் - சார்பில்
இருந்த எளியேற் கிழைத்தநலம் காண்டல்
அருந்தவத் தார்க்கும் அரிது.

அருகணைத்துப் பாலூட்டி ஆதரித்த தாயும்
ஒருகணத்து நின்னன்பிற் கொவ்வாள் -- பருக
இனியபல சேர்த்துதவி என்னையறி யாதுள்
கனியபல செய்தனளோ காண்.
ஒருநன்றி என்றால் உரைப்பேன் உரையில்
பெருநன்றி பற்பல பேணி - அருநன்றி
என்றே எவரும் எடுத்தியம்பச் செய்தனையால்
நன்றே நினது நலம்.
நலமே உருவென்று நானிலத்தோர் நாட்டும்
நலமே உருவாக நண்ணி- நலம் அ நலம்
கண்டிரண்டும் ஈவான் கடவுளிலன் நின்போல
கண்டு நன்றே ஈயும் கருத்து.

நின்குடிக்கும் நின்னடிக்கும் நின்னூர்க்கும் நேயர்க்கும்
என்குடியும் என்னவரும் யானுமிவண் - நன்று
தெரிந்துநிற்பு தோடு தெரிந்தபிறப் பெல்லாம்
புரிந்துநிற்பேம் ஏவல் புகழ்.
ரு
35
F