உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலபோதினி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாக்கியஇயல்]

27


உரிச்சொல்.

பெயர்ச்சொல்லையாவது வினைச்சொல்லையாவது தழுவி அவைகளுக்குரிய குணத்தைக் காட்டுவது உரிச்சொல்லாம். அது பெயரைத் தழுவினால் பெயருரிச்சொல்லென்றும் வினையைத்தழுவினால் வினையுரிச் சொல்லென்றும் சொல்லப்படும்.

உ - ம். மிகப்பெரியவன்-பெயருரிச்சொல் மிகப்படித்தான் - வினையுரிச்சொல்.


வாக்கிய இயல்

1. வாக்கியம். - பிழையில்லாமல் சொற்கள் ஒன்றோடொன்று தொடர்ந்து முடிவுபெற்று நிற்கும் தொடரானது வாக்கியமெனப்படும்.

2.வாக்கியவுறுப்புக்கள் - வாக்கியத்திற்கு எழுவாய், பயனிலை, செயப்படுபொருள், இடைப்பிறவரல், அடைமொழி என ஐந்துறுப்புக்களுண்டு. எழுவாயும் பயனிலையும் இல்லாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/28&oldid=1533929" இலிருந்து மீள்விக்கப்பட்டது