இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எழுத்தியல்]
39
றிலல்லாத இணைக்குறில், குறில் நெடில்களையாவது அடுத்து மொழிகளின் கடைசியில் வல்லெழுத்துக்களை யூர்ந்துவரும். தனிக்குறிலையடுத்த வல்லினமெய்யின் மேல் வராது. இது உயிரெழுத்தாகிய உகரத்தின் சப்தத்துக்குப் பாதியளவு சப்தமுடையது.
முன் காலத்தில் மற்ற உகரத்திலிருந்து வரி வடிவத்திலும் பகுத்துணரும்படி சுக்கு, நெஞ்சு, என்பன போலப் புள்ளியிட்டெழுதிவந்தார்கள்.
இவை, தாம் எவ்வெவ்வெழுத்துக்களால் தொடரப்பட்டு வருகின்றனவோ அவ்வவ்வெழுத்துக்களின் சார்புபற்றி நெடிற்றொடர், உயிர்த்தொடர்,வன்றொடர், மென்றொடர், இடைத்தொடர், ஆய்தத்தொடர் என ஆறு வகைப்படும்.
உ-ம். ஆடு: இதில் டகர மெய்யின்