________________
18 மூன்றாம் குலோத்துங்க சோழன் பல்லவராயர் அப்பாண்டியனைத் தம் நாட்டில் பத்திரமா யிருக்கும்படி செய்வித்து, தென்னாட்டுக்கு விரைந்து சென்று ஈழப்படைகளைப் பொருது ஓட்டும்படி பெருஞ் சேனைகளுடன் தாமே தலைமை வகித்துச் சென்றார். தம் முழுப்பலத்துடன் அந்நாடு நோக்கிச் சென்றவர் அவ்விலங்கைச் சேனைகளுடன் பெரும்போர் புரிந்து அவற்றை அழித்து, படைத்தலைவனையும் கொன்று, குலசேகரபாண்டியனை முன்போல நாடாளும்படி செய்து மீண்டனர். பின்பு, சோழ ராஜ்யம் நடக்கும் முறைப் படி, பாண்டிய நாட்டிலும் தொண்டை மண்டலத்திலும் அரசியல் நிர்வாகம் நடைபெறுமாறு அப் பல்லவராயர் ஒழுங்கு பண்ணினார். அரசியலை நிர்வகிக்கும் தலைவர்கள் தம் காலத்தில் தம் கட்டளைப்படியே நடப்பது போல, தமக்குப் பின்பும் அப்படியே நடந்துவரும்படி திட்டம் செய்து, இளவரசனது அரசாங்கப் பொறுப்பனைத்தை யும் தாமே ஏற்றுப் பெருந்திறமையுடன் நடத்தி வந்தார். இவ்வாறு சோணாட்டுக்குப் பல அனுகூலங் களையும் உண்டாக்கி, அரசனாலும் குடிகளாலும் பாராட் டப்பட்டு வந்த பெருமானம்பிப் பல்லவராயர், சிறிது காலத்தின் பின் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட, அவரது குடும்பப் பாதுகாப்புக்காகப் பல்லவராயன் பேட்டை என்னுங் கிராமம் இராஜாதிராஜனது 8-ஆம் ஆட்சி பாண்டில், அவனது பிரதிநிதியாகவும் அப்போது தலைமை யமைச்சராகவும் இருந்த அண்ணன் பல்லவ ராயரால் இறையிலியாக அளிக்கப்பட்டது. இச்சாஸனம் கூறுகின்றபடி, இராஜாதிராஜனது 8-ஆம் ஆட்சியாண்டுக்குச் சில வருஷங்களுக்கு முன் பாண்டிய நாட்டில் இலங்கைப் படையுடன் பல்லவராயர் கடத்திய பெரும்போரைப் பற்றி, இலங்கைச் சரித்திர