பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

19 இராஜாதிராஜன் மான மகாவமிசமும் விரிவாகக் கூறுகின்றது. அவ் வரலாறாவது : பாண்டிய ராஜ்யத்தின் அரசாட்சியைப்பற்றிப் பராக்கிரம பாண்டியனுக்கும் குலேசேகர பாண்டிய னுக்கும் வழக்கு உண்டாயிற்று. பராக்கிரம பாண்டியன் சிங்களத்து அரசனாகிய பராக்கிரம பாகுவைத் துணை வேண்டினான். அவ்வீழவேந்தன் தன் தண்டநாயகனான இலங்காபுரியை ஒரு பெரும்படையுடன் அனுப்பினன். இலங்காபுரி தென்னாடு வந்து சேருமுன்பே குலசேகரன் சேனையால் முற்றப்பட்டிருந்த பராக்கிரமன், பெண்டு பிள்ளைகளோடும் போரில் கொல்லப்பட்டான். இவ்வாறு 'பிரமாதம்' நேர்ந்தது எனக் கேள்வியுற்ற இலங்காபுரி யெ னுந் தண்ட நாயகன், பாண்டிய நாட்டை வென்று, அதனைக் கொலையுண்ட பராக்கிரம பாண்டியன் உறவினர் எவருக்கேனும் கொடுப்பது என்று துணிந்தான். துணிந்து, பெருஞ்சேனையுடன் சென்று, முதன் முதல் இராமேசுவரத்தைக் கைப்பற்றி அங்குள்ள கோயிலை அழித்தான். பிறகு குந்துகாலம் என்ற இடம் அவன் கைவசமாயிற்று. அங்கே ஒரு கோட்டை கட்டி அதற்குப் பராக்கிரமபுரம் என்று தன் அரசன் பெயரினை யிட்டான். இவ்வாறு வரும் இலங்காபுரியைத் தாக்க வேண்டி, சுந்தர பாண்டியன், பாண்டியராஜன் என்ற இருவர் தலைமையின் கீழ்ப் பெரும்படையைக் குல சேகரன் அனுப்பினான். ஆனால், அவ்விருவரும், சிங்கள தண்டநாயகனால் தோல்வியுற்றார்கள். அதன் பின்பும் பற்பல இடங்களில் போர்கள் நடக்க, அவற்றிலும் சிங்க ளவரே வெற்றியடைந்து வந்தனர். இப்போர்களொன் றில் பாண்டிய தளகர்த்தனான ஆளவந்தான் என்பவன் மடிந்தான்.