பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

20 மூன்றாம் குலோத்துங்க சோழன் இவையெல்லாம் அறிந்த குலசேகரன் கொங்கு நாட்டினின்று தன் மாமன் சேனைகளையும், பராக்கிரம பாண்டியன் சேனைகளிற் சிதறுண்டு போன சிலவற்றை யும், தன் படைகளையும் ஒருங்கு திரட்டிக்கொண்டு தானே போருக்குப் புறப்பட்டான். பெரும் போர் மூண்டது. முடிவில் குலசேகரன் தோல்வியடைந்தான். சிங்களவர் பலவிடங்களைப் பிடித்துக்கொண்டு, அவற்றை யெல்லாம் பலப்படுத்தி வந்தனர். கொலையுண்ட பராக்கிரமனது கடைசி மகனான வீரபாண்டியன், குலசேகரன் கையில் அகப்படாமல் மலை நாட்டுக்கு ஓடி ஒளிந்தான் என்பதை இலங்காபுரி அறிந்து, அவனை மதுரைக்குத் திரும்பி வந்து இராஜ் யத்தைப் பெற்றுக் கொள்ளும்படி சொல்லியனுப்பினான். அப்பாண்டியனும் இலங்காபுரியின் தைரியத்தால் திரும்பிவந்து, சிங்களவேந்தனால் அனுப்பப்பட்ட பரிசு களுடன் தன்னாட்டையும் பெற்று, அவ்விலங்காபுரியின் உதவியுடன் ஆண்டுவந்தான். இதனோடு, இலங்காபுரி போரை நிறுத்திவிட வில்லை. மேலும், கீழைமங்கலம், மேலைமங்கலம் முதலிய ஊர்களைப் பிடித்து, கண்டதேவமழவராயன் என்பவனை அவ்விடங்களை யெல்லாம் ஆளும்படி நியமித்தான். பிறகு, மானவீரன் மதுரை முதலிய பல இடங்களும் சிங்களவர் வசமாயின. பாதபதம் என்ற இடத்தில் நடந்த போரில் குலசேகரனுக்குப் படைத்தலைவனும் மிக்க நண்பனுமான தென்னவ பல்லவராயன் என்பவன் இறந்தான். தொண்டி, கருந்தங்குடி, திருவேகம்பம் என்ற ஊர்களும் சிங்களவர் வசமாயின. இவ்விடங்களை யெல்லாம், மாளவசக்கரவர்த்தி என்பானிடம் ஒப் இது மானாமதுரை என வழங்குகிறது.