உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

21 இராஜாதிராஜன் படைத்து, அவனை ஆளும்படி நியமித்துவிட்டு இலங்காபுரி திரும்பினான். சிங்களவர் மேன்மேலும் வெற்றியடைவதையும் பாண்டியர் ஒரேயடியாகத் தோல்வி யுறுவதையும் கண்டு சகியாத குலசேகரன், மறுபடியும் தன் மறப்படைகளைத் தைரியப்படுத்தித் திரட்டிக்கொண்டு ஆயத்தமாகையில், சிங்கள தளகர்த்தனால் ஆங்காங்கே நாடாளும்படி நியமிக்கப்பட்ட தமிழ்ச் சிற்றரசர்கள், சொல்லாமலே குலசேகரனுடன் சேர்ந்துவிட்டனர். இதனால் வீர பாண்டியன் மதுரை நாட்டை மறுபடியும் இழக்க நேரிட்டது. இப்படித் தன் எண்ணமெல்லாம் பழு தாகப் போனதைக் கண்ட இலங்காபுரி , உடனே தன் அரசனான பராக்கிரமபாகுவை மற்றுஞ் சில சேனைகளை அனுப்பும்படி எழுதி வேண்டிக்கொண்டான். அவ்வா சனும் ஜகத்விஜயன் என்ற தண்டநாயகன் வசம் ஒரு பெரும் படையை அனுப்பி யுதவினான். இலங்காபுரியும் ஜகத்விஜயனுமாகச் சேர்ந்து, திருப்பாலி என்ற இடத் தில் குலசேகரனை முற்ற முறியடித்து, மதுரைக்குச் சென்று, வீரபாண்டியனைத் திரும்பவும் சிங்காதனத்தில் ஏற்றினார்கள். அப்பால், இலங்காபுரி குறும்பராயன் என்றவனைப் போரில் வென்று திருப்புத்தூரைக் கைப் பற்றிக்கொண்டு, பொன்னமராவதி புகுந்து, அங்கே மூன்று மாளிகை கொண்ட அரண்மனை முதலிய கட்டி டங்களை இடித்தழித்து மதுரைக்குத் திரும்பினான். இவையெல்லாம் முடிந்ததும், வீரப்பாண்டிய னுக்கு முடிசூட்டு மகோற்சவம் நடத்தி வைக்கும்படி பராக்கிரமபாகுவிடமிருந்து இலங்காபுரிக்கு ஆணைவர, அதன்படியே அப்பாண்டியனுக்கு மகுடாபிஷேகம் நடத்தப்பட்டது. குலசேகரன், பின்னும் ஒருமுறை ஸ்ரீ வில்லிபுத்