பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

22 மூன்றாம் குலோத்துங்க சோழன் தூரில் இலங்காபுரியுடன் எதிர்த்துப் பெரும் போர் புரிந் தான். ஆனால், அதிலும் அவன் தோல்வியடைந்து, சாத்தனேரியில் போய்த் தங்கியிருந்தான். அதனை கேள்வியுற்ற இலங்காபுரி அவ்வூரின் மேல் படையெடுத் துச் சென்றான். அச்செய்தியை முன்னமே அறிந்த குலசேகரன் வெள்ளத்தில் படையுடன் அவன் மடிய வேண்டும் என்று கருதி, அங்குள்ள பெரிய ஏரி யின் கரையை உடைத்துவிட்டான். இந்தச் சூழ்ச்சியும் நிறைவேறவில்லை. பிறகு குலசேகரன் பாளையங்கோட் டைக்குப் போய், அங்குள்ள பாசறையிலிருந்து கொண்டு சோழனைத் துணை வேண்டினான். இராஜாதிராஜன் உடனே பல சேனைகளைத் தக்க சமயத்தில் அனுப்பி யுதவினான். இப்படைத் தலைவர்களுள் பல்லவராயன், நரசிங்கவன் மராயன் என்ற இருவர் முக்கியமானவர்கள். சிங்களவர் நற்காலம் இதனுடன் ஒழிந்தது. பாண்டிய சோழ கொங்குச் சேனைகளெல்லாம் ஒருங்கு திரண்டு, பாண்டிய ராஜ்யத்தில் கோயில்களை யிடித்தும் கொள்ளை கொலைகளால் பலவகை அட்டூழியங்களைச் செய்தும் வந்த சிங்களப்படைகளைத் திருக்கானப்பேர், தொண்டி, பாசி, பொன்னமராவதி, மணமேற்குடி, மஞ்சக்குடி என்ற இடங்களில் எதிர்த்து, அவைகளைச் சிதறவடித் துப் பாண்டிய நாட்டைவிட் டொழியும்படி செய்தன. இவையே அம் மகாவமிசம் கூறியுள்ள செய்திகள். மேற்கூறிய வரலாறுகளால், இராஜாதிராஜன் இளவரசனாகிய காலத்திலிருந்தே சோழராஜ்யத்தின் ஆட்சி நிர்வாகம் உத்தேசமாக எட்டாண்டுவரை பெருமானம்பிப் பல்லவராயரால் நடத்தப்பட்டு வந்த தென்றும், ஈழப்படை வெற்றியை இராஜாதிராஜனது ஐந்தாமாண்டு (கி. பி. 1168)க்குச் சிறிது முன்பு அப்பல்லவராயர் பெற்றவர் என்றும் அறியலாம். அவ்