உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இராஜாதிராஜன் 23 விராஜாதிராஜனது ஆட்சியை அவர்க்குப் பின் நிர்வகித்துவந்த அமைச்சர் தலைவர் வேதவன முடையான் அம்மையப்பனான அண்ணன் பல்லவராயர் என்பார். இவரும் முன்னவர் போலவே அறிவும் ஆற்றலும் அரசனது அந்தரங்கமும் பெற்று விளங்கியவர். இவர் காலத்திலும் பெரும் போர்கள் நிகழ்ந்து வெற்றிகளுண்டாயின. முன்பு பெருமானம்பிப் பல்லவராயரால் பாண்டிய சிங்காதனத்தில் அமர்த்தப் பட்ட குலசேகர பாண்டியன், சிலவாண்டுகளுக்கெல்லாம் தனக்குச் சோழ வேந்தன் செய்த நன்றியை முற்றும் மறந்து, பகைவனான சிங்கள வேந்தனுடன் சேர்ந்து கொண்டு, சோணாட்டுக்குத் தீங்கிழைக்கச் சூழ்ச்சி செய்தான். இதை யறிந்த அண்ணன் பல்லவராயர், மிக்க சினங்கொண்டு இதற்குக் காரணமான இலங்கை யரசன் பராக்கிரமபாகுவை அடக்கியொடுக்க முதலில் வழி தேடினார். அச் சிங்களவரசனுக்கு அவன் நாட்டிலே பகைவனாய் இடுக்கண் விளைத்து வந்தவன் அவனுடைய மருமகனான ஸ்ரீவல்லபன் என்பவன். அவனை இப்பல்லவராயர் தமக்கு ஏற்ற துணையாகக் கொண்டு, வேண்டிய முன்னேற்பாடுகளுடன் இலங்கை மேற் படையெடுத்தார். அங்கே, ஸ்ரீவல்லபன் சேனை களும் சித்தமாயிருந்து இவர்க்குப் பேருதவி செய்தன. அதனால் பராக்கிரமபாகுவின் சேனை போரில் முற்ற முறியடிக்கப்பட்டு ஒழிந்தது. இப்பெரு வெற்றியால் ஈழநாடு சோழநாட்டுக்கு உட்பட்ட தாயிற்று. ஜயசீலரான அண்ணன் பல்லவராயர், உடனே பாண்டிய நாட்டிற்குச் சென்று நன்றி மறந்த குலசேகரனை நாட்டைவிட்டு ஓட்டி, அவன் பகைவனாய் முன் தோல்வியுற்ற வீரபாண்டிய னுக்கே பாண்டிய சிங்காதனத்தை யளித்து ஆளச்