________________
32 மூன்றாம் குலோத்துங்க சோழன் பிடவில்லை. அதனால், இதனை அவ்வளவு சிறப்புடைய தாக அக்காலத்தார் கருதவில்லை யென்று தோன்று கிறது. ஆனால் அக் கட்டுரைகள் குறிப்பிடும் பெரும் போர் ! ஈழங் கொண்டருளியது' ஆகும். இது, குலோத்துங்கனது 10-ஆம் ஆட்சி வருஷத்துக்குமுன் நடந்ததாக வேண்டும். இவன் தமையன் காலத்தி லிருந்தே, இலங்கையரசனான பராக்கிரமபாகு சோழர்க்குப் பரமவைரியாய்த் தென்னாட்டை அலைத்து வந்தவன் என்று முன்பே கூறினோம். அவனோ அவன் பின்னவனோ, இக்குலோத்துங்கன் காலத்தும் பெருக் தொந்தரவுகளை விளைத்தவனாக வேண்டும் என்றும், அதனாலே தான் இச்சோழனும் ஈழப்போரைத் தொடுக்க நேர்ந்தது என்றும் தோன்றுகின்றன. திரு மாணிக் குழிக் கல்வெட்டு ஒன்றில், ஈழவேந்தன் முடி மேல் தன்னடியிணையைச் சூட்டியவன் என்று குலோத் துங்கன் புகழப்படுவதனால், இலங்கையரசனொருவனை அடக்கி வர இவன் படையெடுத்தான் என்று தெரி கின்றது. அச் சிங்களவேந்தன் பராக்கிரமபாகு ஆவன். தனது ஆட்சி யிறுதியில், அதாவது கி. பி. 1188-9-ல் இவ் வெற்றியைக் குலோத்துங்கன் பெற்றவனாக வேண்டும் என்றும், நிஸ்ஸங்கமல்லன் என்று பேர் பெற்றவனும், இச்சோழன் சேனாபதியாய்ப் பாண்டிய நாட்டுப் போர்களை வென்றவனுமான கோப்பெருஞ் சிங்கன் தலைமையில் இப்போர் நடந்திருக்க வேண்டும் என்றும் கருதப்படுகின்றன. (4) கருவூர் கொண்டது :- மேற்குறித்த ஈழப் போரை அடுத்துச் சாஸனங்கள் பலவும் கூறும் பெரும் போர் கருவூர் கொண்டருளியது ஆகும். இக் கருவூர், சேர மண்டலத்தின் பழைய தலைநகராய் அம் மண்டலத்தின் ஒரு பிரிவான கொங்கு நாட்டில் உள்ள