உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

33 போர்ச் செயல்கள் தாகும். பிற்காலத்தே, இந்நகரும் கொங்கு நாடும் சோழர் ஆதிக்கத்துக்கு உள்ளடங்கின. ஆயினும் இப் பிரதேசங்களைப் பழைய சேரரின் மரபினர்கள், கருவூர் தாராபுரங்களைத் தலைநகர்களாகக் கொண்டு, அச்சோழ ராதிக்கத்தின் கீழ் ஆண்டு வந்தனர். இவ்வாறிருந்த வர்கள் குலோத்துங்கன் ஆட்சிக்குச் சிறிது முன் காலக் தொடங்கி, சோழர்க்கு அடங்காது சுவாதீனங் கொண்டாடி வந்தனர்போலும். அதனால் அவர்களை யும் அடக்கி முன்போலத் தன் ஆதிக்கத்தில் வைக்க எண்ணினான் குலோத்துங்கன். இவன் காலத்தில் கருவூரிலிருந்தாண்ட சேரன், கோநேரின்மை கொண் டான் வீரசோமன் என்று தெரியவருகின்றான். இச் சேரன், தனக்கடங்காமல் பகைமை கொண்டதனால், இவன் மேற் படையெடுத்துச் சென்று கருவூர்ப்பக் கத்தில் நம்சோழன் போர் தொடுத்தான். இப்போரில், கொங்குச் சேரன் பெருந்தோல்வியடைந்து, குலோத் துங்கனைச் சரண மடைந்தனன். இவ்வெற்றியால், அவனது தலைநகரான கருவூர் சோழன் கைவசமாயிற்று. இந்நகரில் குலோத்துங்கன் ஆடம்பரத்துடன் பிர வேசித்துச் 'சோழகேரளன் என்று மன்னர் தோழ விசையமா முடி" சூடி விளங்கினன். 'சோழகேரள தேவன்' என்று இக்குலோத்துங்கனையும், 'சோழ கேரள மண்டலம்' என்று கொங்கு நாட்டையும் சாஸனங்கள் பின்பு கூறியிருத்தலும் அறியத்தக்கது. இதன் பின்பு, அந்நாட்டரசையும் சரணடைந்த சோ னுக்கே அளித்து, முன் போலவே சோழவாதிக்கத்தின் கீழ் அவனை அமர்ந்து ஆளச்செய்துவிட்டுத் தன் நகருக்கு மீண்டார். இவ்வாறு சேரனுக்கு முடிவழங்கிய சிறப்புப்பற்றி, கருவூர்க்கு " முடிவழங்கு சோழபுரம்' எனப் பெயர் பின்பு உண்டாயிற்று.