________________
34 மூன்றாம் குலோத்துங்க சோழன் இக் கருவூரே சேராது பழைய தலைநகர் என்று முன் னூல்களும் பின்னூல்களும் கூறுவதற்கேற்பவே திரு வஞ்சிமாநகர்,வஞ்சிமாநகர் என்று சாஸனங்களும் வழங்குவதும், " மதுரையும் பாண்டியன் முடித்தலையுங் கொண்டருளி காஞ்சியும் வஞ்சியுங் கொண்ட ருளி (Pd. Insc. 164) என, இக் கருவூர்வெற்றியைக் கூறுமிடத்து, இந்தகரை வஞ்சி என்று இக் குலோத்துங்கன் காலத்துச் சாஸனக் கட்டுரை கூறுவதும் இங்கே குறிப்பிடத்தக்கவை. 'முடிவழங்கு சோழபுரம்' என்ற பெயரைக் கருவூர் இப்போது இவனால் பெற்றது போலவே, முடி கொண்ட சோழபுரம்' என்ற பெயரை மதுரை இவனால் முன்பு பெற்ற செய்தி ஒப்பிடத்தகும். கருவூர் கொண்ட செயல், குலோத்துங்கனது 16-ஆம் ஆட்சி யாண்டிலிருந்தே சாஸனங்களில் காணப்படுவதனால், கி.பி. 1194-ஆம் வருஷத்தை ஒட்டி, இக் கொங்குப் போர் நடந்ததாக வேண்டும். (5) கச்சி கொண்டது:- இக் கருவூர் கொண்டதை அடுத்துக் குலோத்துங்கனது பெருமையாகப் கூறப் படுவது அவன் கச்சி கொண்டது' ஆகும். கச்சி யைப் பற்றிய பிரஸ்தாபம் குலோத்துங்கனது 19, 34-ஆம் ஆண்டுக் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. அவை ஸ்ரீரங்கம், குடுமியான் மலைகளில் முறையே அமைந்தவை. அவ்விரண்டிலும், குலோத்துங்கனது முதற் படையெடுப்பாக, அவன் வடதிசை சென்று ஆங்குள்ள மன்னர்களை அடிப்படுத்திய பின் கச்சிமா நகர் புகுந்தான் என்று காணப்படுகிறதேயன்றி, அக் கச்சியைப் போரில் வென்று கைக்கொண்டான் என்று குறிப்பிடப்படவில்லை. அதனால், கருவூங் கச்சியுங்