உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அச்வத்தின் மேலே ஏறிவந்தார் சத்தியவான் சாவித்திரி தேவியும் தன் மாமியுடன் தண்டிகையில் ஏறிவர எல்லவரும் இன்பமுடன் கண்களிக்க வாத்தியங்கள் தான் முழங்க வந்தார் தன் தசமதில் பட்டணத்து வீதிசுற்றி வந்தார் அரண்மனயில் இஷ்டமுடன் ராஜ்ஜியத்தை யவசேனர் தானடைந்தார் அச்வபதி ராஜருக்கு அப்பொழுது தூதனுப்ப மாளவி தேவியுடன் வந்தாரே அச்வபதி யவசேனராஜர் எதிர் கொண்டு உபசரித்து (உம்ம) மங்கையரால் வந்த வாழ்வு இதுராஜாவே அச்வபதிராஜா அதிக சந்தோஷமுடன் மங்கையுடதன் மகிமை மனமகிழ்ந்து தான் கேட்டு அன்னையருந் தந்தையரும் அருமை மகளை அணைத்து கண்களித்து ஆனந்த நீர் சொரிந்தார் கண் மலரால் சாவித்திரி நாயகரும் (ராஜா) தாளடியினில் பணிய கண்களித்து ஆனந்தங்கொண்டே மனமகிழ்ந்தார் தபஸாலதிகமுள்ள சாவித்திரி யம்மனவள் தம்பிமார் நூறுடனும் தன் புதல்வர் நூறுடனும் எமராஜன் தன் கிருபையால் ஏற்றமுள்ள இராஜ்ஜியத்தில் சங்கரியைப் பூஜை செய்து (ஸௌ) பாக்கியவதியாயிருந்தா மார்க்கண்டேயர் உரைக்க மனமகிழ்ந்து பாண்டவர்கள் (ள் ஆச்சரியமாகுமிந்த அருங்கதையைக் கேட்டுமவான் அம்மன் மகத்துவத்தைக் கேட்டு மனங்குளிர்ந்து சாவித்திரிதேவியரை சிந்தை செய்துமே ஸ்துதித்தாள் ஒத்திசைத்த கெம்புடனே ஒளிமுத்துக் கோர்த்தாப்போல் சித்திரமாம் பாரதத்தின் நடுவிருக்கும் சற்கதையை கற்றவரும் கேட்டவரும் கற்றுக்கொடுத்தவரும் சாவித்திரியம்மனைப்போல் சந்தோஷமாயிருப்பாள் மங்கலியம் தான் பெருகும் மைந்தர்களைப் பெற்றிடுவாள் மஹாதேவி தன் கிருபையால் வாழ்ந்திடுவார் என்று (சொன்னார். ஓம் சுபம்.