உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ix கணைக்கா லிரும்பொறையோடு போர் புரிந்து வென்ற செய்தி பண்டைத் தமிழ் நூல்களால் அறியப்படுவதே. ' தமிழ்ப் புலவர் வரலாறு' என்ற பெயரால் இரண்டு ஆண்டுகளின் முன்பு என்னால் எழுதி வெளியிடப்பெற்ற நூற்றொகையில் வரும் பொய்கையார் வரலாற்றிலேயான் இச்செய்தியைச் சரித்திர முறை பற்றி விளக்கினேன். அங்குச் சோழன் செங்கணான் சேரமான் கணைக்கா லிரும்பொறையோடு செய்த போர்கள் இரண்டு என்று கூறினேன். அதனை அறிஞர் சிலர் கண்டித்தனர். இவ் வுண்மைச் செய்தியைப்பற்றி மேலும்சிறிதளவு ஆராய்ந்து இந்நூலில் ஆண்டிருக்கின்றேன். இங்கும் முன்போலவே இரண்டு போர்கள் நிகழ்ந்ததாகவே குறித்துளேன். புற நானூற்றிலே எழுபத்துநான்காம் செய்யுளாகிய " குழவி யிறப்பினும் " என்று தொடங்கும் செய்யுள், சேரமான் கணைக்காலிரும்பொறை பாடியதாம். அச்செய்யுளின் கீழுள்ள குறிப்பு சேரமான் கணைக்கா லிரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப் புறத்துப் பொருது பற்றுக்கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிற் கிடந்து தண்ணீர் தா வென்று பெறாது பெயர்த்துப் பெற் றுக் கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு' என்பதாம். பொய்கையார் பாடிய கள வழி நாற் பதிலே கழுமலப் போர் விவரிக்கப்பட்டது. கழுமலம் சோழ நாட்டின் கண் உள்ளது. குடவாயிற் கோட்டம்சேர நாட்டின்கண்ணிருப்பது. இங்குச் சிறை செய்யப்படு தற்கு.முன் நிகழ்ந்த போர் திருப்போர்ப்புறம் என்ற ஊரில் உள்ள போர்க் களத்தில் நிகழ்ந்தது. திருப்போர்ப் புறம் எந்நாட்டின்கண்ணுள்ளது என்பது விளங்கவில்லை.