உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

________________

பாரத பூமியோ, பெரியதொரு கண்டம். அதன் கண் உள்ள நாடுகளும் அரசுகளும் நூற்றுக் கணக்கா னவை. அவையனைத்தையும் தென்னாட்டிலே தமி முகத்திலே அரசுபுரிந்த ஓர் அரசன் வெல்லவும் அடக்கி யாளவும் கருதுவது எவ்வகையாற் பொருந்தும் என்ன லாம்? பாரத கண்டம் உருவத்தாற் பெரிது ; பழமை யான சரித்திர முடைமையாற் சிறந்தது; இயல்பாகவே அமைந்த மலையரண் கடலரண்களால், பிற நாட்டவர் எவரும் தன்னை பணுகல் எளிதிலியலாத மாண்பு உடை யது; எவர் வரினும் இடம் தரும் அறச் செல்வமும் உடையது ; தன் உடலைப் பல கூறாகப் பிளந்து ஒரு தாய் தன் மக்களுக்குக் கொடுப்பது போலப் பல வகை மொழிகளும் கொள்கைகளும் ஒழுக்கங்களும் வரன் முறைகளும் ஆட்சி முறைகளும் ஆகிய பிரிவுகள் பலவும் தன்னைத் துண்டு துண்டுகளாய்ப் பிளந்ததால், சிறுமை யும் படைத்திருக்கிறது. கதிரவன் குலத்தார் ஒரு குடைக்கீழ் ஆண்ட இப்பெரு நாட்டின் பெருமையும் சிறுமையும் அக்குலத் தோன்றலாகிய திருமாவளவன் உள்ளக் கண்ணில் உதித்தன. அவன் அதன் பெரு மையை நினைந்து, மனமுருகிச் சிறுமைபைத் தவிர்க்க வழி யுளதோ வெனப் பல முறை ஆராய்ந்தான். பிடர்த் தலைப் பெரியாரை அமைச்சராய்ப் பெற்றவன் சூழ்ச்சித் திறத்தைப் பற்றிப் பேசவும் வேண்டுமோ? அரசர் பிரானாகிய கரிகாலன், தன் அம்மானாராகிய அமைச்சப் புலவரை யடுத்து, " நமது புண்ணிய பூமிக் குள்ள பெருங்குறை யொன்றை அகற்ற விரும்புகிறேன், என்றான். அவர், "குறை யென்னை? என்றார். அதற்கு