உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

________________

110 யோரத்திலே பண்ட சாலையொன் நமைக்கப்பட்டது. மருவூர்ப்பாக்கத்திலே தமிழ்ச் சங்கத்தின் பொருட்டுப் பெரியதொரு கட்டடம் கிருமிக்கப்பெற்றது. அதற்கருகே ஆயுள்வேத வைத்திய வித்தியா சாலைக்கும் வான சாஸ் திர ஆராய்ச்சிச் சாலைக்கும் உதவுமாறு அகன்ற பெரிய கட்டடங்கள் அமைக்கப்பெற்றன. அந்தணர் பலரும் புலவர் பலரும் அரசர் தமக்கு அமைத்துக் கொடுத்த மனையகங்களிற் குடியேறினர். நில வளமும் நீர் வளமும் அமைந்த சோழநாட்டுக்கு வாணிகத்தால் வளம் பெருக்க வாய்ப்புடையதாய் அமைந்த அந்நகரிலே வணிகரும் உழ வரும் அருந்தொழிலாளிகள் பலரும் தத்தமக்கென அடைந்த இடங்களில் மனைகள் அமைத்துக்கொண்டு குடியேறினர். தமிழக மக்களுட் சிறந்தார் பலரும் வட நாட்டு மன்னருட் பெரும்பாலோரும் புது நகரத்தே அரசர் பிரான் புகுதரும் வைபவத்தைக் காணும் அவா வோடு வந்து நிறைந்திருந்தனர். ஒளி நூலறிஞரால் எடுத்துரைக்கப்பட்ட நன் னாளிலே சோழ குலா திபனாகிய கரிகாற் பெருவளத் தான் உறையூரை நீங்கிப் புறப்பட்டுப் பரிவாரங்கள் புடை சூழ, அமைச்சர் பலர் அருகிலே வர, அரசுவா வின் மீதமர்ந்து, வழியெல்லாம் குடி மக்கள் நன்கு உபசரித்து வாழ்த்துக் கூறப் பிரயாணம் செய்து, நல் லோர் குறித்த நன்னாளிலே புகார் நகர் வந்தடைந்தான். நகரத்தே குழுமியிருந்த அந்தணரும் அரசரும் வேளாள ரும் வணிகரும் புலவரும் பாணரும் பிறரும் திரண்டு வந்து, அரசனை வரவேற்றனர். அவந்திவேந்தன் உவந்து கொடுத்த தோரண வாயில் வழியே அரசர்க்கரசனாகிய