உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

தேவலீலைகள் !

ஏற்பட்டுவிடும். இந்தக் காமுகனோ, பிராமணனாக இருக்கிறானே! மாபாதகம் செய்யினும், மறையோனை நான் என்ன செய்வது?" என்று அவர் எண்ணியிருக்கக்கூடும். எது எப்படி இருப்பினும், சுகுமாரன் என்ற - அந்தப் பார்ப்பனன் செய்த பாபக்கிருத்யங்களுக்காகப் பரமன் அவனைத் தண்டிக்கவில்லை. அவன் செய்க அக்ரமங்களிலே ஆயிரத்திலே ஒரு பாகம் செய்தாலும் போதும், அரக்கனாக இருந்தால் அரனோ, அரியோ, அவர் தம் ஏவகரோ, கொடியிலே பஸ்மீகரம் செய்து விட்டிருப்பர். காமுகனான சுகுமாரனை ஒழிக்கும்படி கன்னியர் கடவுளைத் தொழுதும் பலன் இல்லை. அவர் அவனை அக்கிரமத்திலேயே புரளத்தரன் விட்டுவைக்க முடிந்தது, ஆண்டவனின் கோபம் அவனை அணுக முடியவில்லை? பாபம் அவர்தான் என்ன செய்யமுடியும்? புற்றிலே இருக்கும் பாம்பைக் கொல்ல எத்தனைபேர் கிளம்புவர்? கொசு அடிக்கவோ எக்கோழையும் தயார். அதுபோலத்தான், அரக்கனை அழிப்பது என்றால் ஆண்டவனுக்கு அரை நொடி வேலை; ஆரியனிடம் அவ்வளவு எளிதிலே அவர் அணுக முடியாதே!

காமம் பிடித்த பார்ப்பனனை அவ்வூர் அரசன் நாடு கடத்தினான். சுகுமாரன் காடு சென்றான்; அவ்விடத்தையும் காமவேள் நடன சாலையாக்கினான் எப்படி? இதோ பாருங்கள்.

"ஐயா! நான் புலைச்சசி!"

"இல்லை! வலைச்சி! உன் அழகெனும் வலை வீசி இந்தப் பூசுரனைப் படித்துவிட்டாய். புலைச்சியல்ல; என்........."