உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

தேவலீலைகள் !

காமவல்லி காலம் முடியும் நேரத்தில், சுகுமாரனை அருகழைத்து அவன் பெற்ற பெண்மக்களைப் பக்கத்தில் நிறுத்தி, "நான் போகிறேன்! என் மக்களை உன்னிடம் ஒப்படைத்துவிட்டுப் போகிறேன், இவர்களை நீதான் ரட்சிக்க வேண்டும்" என்று கூறினாள். "இனி நீயே இந்தப் பெண்களுக்குத் தாயும் தந்தையும்" என்று கூறித் தலைசாய்த்துவிட்டாள். பிறகு சுகுமாரன், அப்பெண்களுக்குத் தாயும் தகப்பனும் மட்டுமல்ல நாயகனுமானான். தாயை இழந்தபோது தவித்து, "ஐயோ அம்மா! என்று அலறிய அப் பெண்கள், பிறகு அவனுடைய காமச் சேட்டையினால் உண்டான அலுப்புக் காரணமாக "ஐயோ! அப்பா!" என்று அலறி வாழ நேரிட்டது. அவனோ, தாய் இருந்தவரை அவளோடு வாழ்ந்தோம். தாய்க்குப் பிறகு மகள் தொண்டு செய்கிறாள் என்று எண்ணியிருப்பான். ஈனத்தனமான இக்காரியத்திலே ஈடுபட்டு அக்காமுகன் இருந்தபோதாவது இடி கிடைத்ததா இறைவனிடமிருந்து இல்லை.

பிறகு அவன் வழிப்பறி நடத்தினான்? எதிர்ப்பட்டோரைத் தாக்கினான். அவர்களின் கூக்குரலும் தோத்திரமும் அவனுடைய வெற்றிச் சிரிப்பின் சத்தத்தினால் ஆண்டவன் செவியில் விழவில்லை போலும்! அவனை அவர் அப்போதும் ஏதும் செய்யவில்லை!

இந்நிலையில் காட்டுக் கொள்ளைக்காரனான சுகுமாரனைக் காவலாளிகள் பிடிக்க வந்தனர்; மிரண்டோடினான் வேறோர் காட்டுக்கு.

"சரி கடைசியில் காவலரிடம் சிக்கினான்; அவர்கள் அவனைக் கொன்றார்கள். அடாது செய்தவன் படாது