பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாதுரை

21

படுவான் என்ற பழமொழி பொய்யாகவில்லை" என்று கதை முடிகிறது போலும் என்று கருதிவிடாதீர்கள். - வேறு ஒருகாட்டிலே அவன் போன போது, நாககன்னி யர் அங்குச் சிவபூஜை செய்து கொண்டிருந்தனர்; - தரி சித்தான்; இறந்தான்; கொல்லப்படவில்லை. -

ஒழியட்டும், இறந்தானல்லவா? பிறகு பூலோ கத்திலே அவன் செய்த பாவங்களுக்காக, அவனைக் கடவுள் நரகத்திலே தள்ளித்தண் த்திருப்பார்' என்று அவசர முடிவுக்கு வந்துவிடாதீர்.. பாபம் செய்தவன் நரகம் சேர்வான் என்ற நிதியின்படி, அவனுக்கும் நடக்கும் என்று முடிவு செய்துவிடாதீர்கள். அப்படிஒன்றும் அவனுக்கு நரகவேதனையும் தரப்படவில்லை.

குமா ரனின் கெட்ட நடத்தையைப்பற்றிக் கேட், 'டதும், அப்பாவிக்கு நரகம்தான் என்று பலரும் அவசர முடிவுக்கு வரக்கூடுமே, அதுபோலவே சுகுமாரனின் * தீய செயல்களைத் தெரிந்திருந்த யமபடர்கள், இறந்த வனை இழுத்துச் செல்ல வந்தனர். ஆனால் எதிர்ப்புறத் திலே வந்து நின்றனர் சிவகணங்கள்! "தொடாதே! இவன் சிவானுக்கிரகம் பெற்றவன். சிவபதம் அழைத் தேகவந்திருக்கிறோம் என்றனர். கணங்கள். : “இவனா? இக்காமுகனா? கள்ளன? புலைச்சியைப் புணர்ந்தவனா? தாயையும் கூடி மகளையும் கூடி சேர்ந்த மாபாவியாம் இவனா சிவானுக்கிரகம் பெற்றவன் என்று கேட்ட னர் யமபடர்கள். "ஆம் இவன் ஆவிபிரியப்போகும் நேரத்திலே சிவபூஜை தரிசனம் செய்தான்; எனவே சிலபாதம் சேரவேண்டும்' என்றனர் சிவகணங்கள். யமபடருக்குச் சிவகணங்களை எதிர்க்கமுடியவில்லை,