பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

தேவலீலைகள்


எனவே சுகுமாரன் சிவபாதம் அடைந்தான். இப்படி யொரு புராணம் இருக்கிறது. இதிலுள்ள புளுகு கிடக் கட்டும் ஒரு புறம்; பார்ப்பனன் மாபாதகம் செய்த போதிலும், கடைசிவரை திருத்தமே அடையாமவிருந்த போதிலும், சாகும் போது தன் பாபச்செயலுக்காக மனம் - வருந்தாது இருந்தபோதிலும், நாககன்னியர் சிவபூஜையை நடாத்தியதைக் கண்டதற்காக, அந்தப் டாவிக்கு நரகம் இல்லாமல் - போனதுடன், சிவபதம் கிடைத்ததாம்! இந்த நீதியை நாதன் அளித்தார் என் மூல, நாதனாக இருக்க முடியுமா? ஆண்டவன், இப் படிப்பட்ட அக்கிரமக்காரனை அழிக்காமல், அ.தரிக்க லாமா? பாபியானாலும் பார்ப்பானாக இருந்ததற்காகப் பரமன் பயப்படுவதா?

நாககன்னியர் தாம் நல்வழிபடச் சிவனைப் பூஜை செய்தனர். இவனோ கள்ளன், காமுகன் காட்டிலே ஓடி வரும் போது இப்பூனை நடைபெறக் கண்டான் தற் செயலாக! இவன் பூஜை செய்தானா? இல்லை. மனம் உருகி மன்னிப்புக்கேட்டானா? இல்லை! இவ்விதமிருக்க இவன், பிறர் சிவபூஜை நடத்துவதைக் கண்டதையே பாதகம் துடைக்கு மார்க்க மாக்கிக்காட்டிய மடமை, மாநிலத்திலே பாவிகளை அதிகரிக்கச் செய்யுமா? குறைக்குமா? கள்ளக் கையொப்பமிடுபவனும், கொள்ளை படிப்பவனும், வஞ்சிப்பவனும், பொய்யனும், 'இவை பாபமன்றோ! உனக்கு நரகமன்றோ சம்பவிக்கும் என்று எவரேனும் கூறினால், "நாமென்ன அவ்வளவு அதிகமான பாபம் புரிந்தோமா? சுகுமாரனைப் போலக் கெட்டு அலைந்தோமா? அப்படிப்பட்ட சுகுமாரனுக்கே சாகும் நேரத்திலே சிவபூஜை தரிசனம் கிடைத்த ஒரே