பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாதுரை

23

காரணத்துக்காகச் சிவபதம் கிடைத்ததாமே, நமக் கென்ன பயம்? - நாம் தான் கிடைத்த பொருளிலே. சிறிதை எடுத்துக்கிருத்திகை யன்று சிவன் கோயிலிலே, கைங்கரியம் செய்திருக்கிறோமே, பாவம் பஸ்மீகரமாகி யிருக்காதா?" என்று தானே எண்ணுவான்!

எந்தவிதமான நீதியின்படி, சுகுமாரனுக்குச் சிவ பதம் தந்தார் சிவபெருமான்? சைவத்தின் பெருமை இதுவா? செய்யத்தகாதன செய்பவனானாலும், சாகும் போது சங்கரா என்று பிறர்கூறும் சத்தத்தைக்காதிலே கேட்டாலே - சிவபதமா? - இது நீதியா? முறையா? நேர்மையாகுமா? வலிந்துபிறன் பொருள் கொண்டான். அடையும் தீ நிறைந்த இருப்புச்சால் இருக்கிறதாம் தரக லோகத்திலே அந்த அக்கினிக் குண்டத்திலே அல்லவா வழிப்பறிக்கள்ளனர்.சுகுமாரனத் தள்ளியிருக்க வேண் டும். புணரக்கூடாதவரைப் புணர்ந்தவர் அணைத்துக் கொள்ள இரும்புக் கம்பம் உண்டாம் நரகத்தில். வசர கண்டமாம் அதற்குப் பெயர். அந்த வேதனையை அல் லவா அந்தக் காமுகன் பெற்றிருக்க வேண்டும். முட் களால் கொத்துண்ணும் நரகம்ஒன்றும் - பெயர்சான்மலி என்பதாம், இங்கு உயர்வு தாழ்வு கருதாது புணர்ச்ய செய்தோன் தள்ளப்படுவாளும், புலைச்சியைக் கூடிசி இப்பூசுரனை இதிலேயல்லவா போட்டிருக்க வேண்டும் இவை ஏதும் இல்லை; சிவபதமாம் இந்தச் சீர்கேடனுக்கு காமுகனுக்குக்கடவுள் அருளாம்! கள்ளனுக்குக்கைலாய பதமாம். மாபாதகம் செய்தவனுக்கு மகேஸ்வரனின் அருளாம்! இது கடவுள் கொள்கைக்கு உகந்ததா, மனித நீதிக்கு அடுக்குமா, அறிவுக்குப் பொருந்துமா?

இத்தகைய பாப கிருத்தியங்களைச் செய்தும், பரம னருள் பெற்றவர்கள் பார்ப்பனர்களன்றி வேறு வகுப்