பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

தேவலீலைகள் !

பினர் காணோமே எந்தப் புராணத்திலும் அது ஏன்? 'நமது கண்ணப்பர், 'கண்ணைத் தோண்டித் தந்தார் கடவுள் அருள் பெற, நமதுகாரைக்காலம்மை உடல்தேய உதிரம் ஒழுக உருண்ட பிறகு சிவனருள் பெற்றார். சுகுமாரன் போன்ற பார்ப்பனர்கள் மட்டும், கேட்கவும் குலாடுங்கும் கேடுகள் செய்தும், மிக மிகச் சாமன்ய-, அறிவுக் கொவ்வாத காரணத்துக்காகப் பாபம் துடைக் கப்பட்டுப் புண்யயதம் - பெறுவதாகப் புராணங்கள் - இருப்பதன் மர்மம் என்ன? சுகுமாரன் ஒருவன் மட்டும் தானா? தாயைப் புணர்ந்து தகப்பனைக்கொன்ற மாபாவி ' பார்ப்பன்றுக்கு' - ஆலவாயப்பனின் அருள் கிடைத் கதைத் திருவிளையாடற் புராணம் செப்புகிறதே! ஏன் இது போல ஆண்டவன். ஓரவஞ்சனை செய்பவனாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறான்? இது பக்திக்கோ -யுக் திக்கோ ஏற்றதாகுமா? பார்ப்பனன் எக்காரியம் செய் தாலும் அவன் விஷயத்திலே ஆண்டவன் அருள் சுரக்கிறான் ஏன்? அந்தப் பார்ப்பனக் குலத்துக்கு --மகிமையைக் கற்பிக்க, மற்றக் குலத்தைத் தாழ்தத. ஏற்பட்ட சூழ்ச்சிகள் இவை. -

. 'போ பரதா! எதோ ஒரு சுகுமாரன் கதையைக் கூறி, ஒரேயடியாக அதிலிருந்து பொது முடிவு கட்டு கிறாயே, ஒரு மரம் தோப்பாகாது பார் ' என்று சிலர் கூறக்கூடும். எனவே, இதோ மற்றோர் மாபாவியை அறிமுகப்படுத்துகிறேன், சொல்லொணாத் தீச்செயல் புரிந்தவனுக்குச் சுகுமாரன் என்ற பெயர் இருந்தது. இதோ இவனுக்கும் அழகான பெயர் குணநிதி: என்ன குணம்? என்ன நிதி? என்று நீங்களே பிறகு யோசிக்க லாம், கேளுங்கள் இவன் கதையை