உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாதுரை

25

இவன் பிறந்த இடமே புண்யபூமி கோசலநாடு. கோசல நாட்டிலே கிரிநாதன் என்பவனின் மகன் குணநிதி என்பவன் இருந்தான். இப்பார்ப்பனன் குரு பத்தினியைக் கற்பளித்தான். சல்லாபம் கெட்டு விடுமே என்று அஞ்சி குரு இருக்கும்வரை தொல்லை தானே என்று கருதி துணிந்து குருவையே கொலையும் செய்தான். இவை மட்டும் குணமெனும் நிதியைத்தராது என்று எண்ணினான் போலும் இக்குணநிதி. எனவே தாய் தந்தையரைக் கொன்றான். என்ன நடந்தது? குணகிதிக்குக் குட்டம் வந்ததா, குலைநோய் கண்டதா? கண் கெட்டதா; கைகால் பட்டுப் போயிற்றா? இல்லை! இறைவன், அவனை ஏதும் செய்தாரில்லை. ஊரார் கோபித்து அவனைக் காட்டிலே விரட்டினர். அங்கு அவன் இறந்தான்.

"ஒழிந்தானா பாவி! அவனுக்கு அந்தக் கதிதானே கிடைக்கும்!" என்று கூறிவிடாதீர். கதைமுடியவில்லை. குணநிதி இறந்த உடனே யமபடர் வந்தனர் குருத்துரோகியை, பெற்றோரைக் கொன்ற பேயனை—குரு பத்தினியைக் கற்பழித்தகாமுகனை, அவர்கள் எந்தெந்த நரகத்திலே தள்ள எண்ணினரோ தெரியவில்லை. யமபடர்கள் அவனை இழுத்துச் செல்லத் தொடங்கியதும் சிவகணங்கள் வந்துவிட்டன.

"ஆஹா! என்ன ஆண்வம், யமபடர்காள்! எமது சிவனடியாரை அணுகும் துணிவு எங்ஙனம் பெற்றீர்?"

"சிவனடியாரை நாங்கள் இம்சிக்க வருவோமா? இவன் குணநிதி, குருத்துரோகி"