பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது "இந்திரா காங்கிரஸ்" என்னும் பெயரால் அழைக்கப் படும் இந்திய தேசத்தின் மிகப் பெரிய கட்சி 1985 இறுதியிலே தனது நூற்றாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியிருக்கின்றது. ஒரு நூறு வயதை அடைந்து விட்ட இந்தக் கட்சிதான் இந்தியா முழுவதையும் இன்று ஆட்சி புரிகின்றது. மாநில வாரியாகப் பார்த்தாலும், மிகப் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரசே ஆட்சியில் இருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டப்படிப் பார்த்தால் மற்ற கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மிகச் சில மாநிலங்கள் மீதும் இ. காங்கிரசின் செல்வாக்கிலுள்ள மத்திய அரசே மேலதிகாரம் செலுத்துகின்றது. அங்கெல்லாம் பிரதான எதிர்க்கட்சியாகவும் இருந்து காங்கிரஸ் கட்சி செயல்படுகின்றது. இந்தியப் பெருநாடு, 1947 ஆகஸ்டு 15ல் பிரிட்டிஷ் பேரரசிடமிருந்து சுதந்திரம் பெற்றது. சுதந்திர