பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

14 | இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது இந்தியாவிலே முதன்முதலில் ஆட்சிக்கு வந்தது சுதந்திரத்தைத் தேடித் தந்த காங்கிரஸ்தான். உலகிலேயே மிகப்பெரிய கட்சி அமெரிக்க ஐக்கிய குடியரசிலேயுள்ள குடியரசுக் கட்சியும் ஜனநாயகக் கட்சியும் ஒரு நூறு வயதுக்கு மேற்பட்டவையாகும். இங்கிலாந்திலுள்ள கன்சர் வெட்டிவ் கட்சி, லிபரல்கட்சி, தொழிற்கட்சி ஆகிய மூன்று பெரிய கட்சிகளுள் கன்சர்வெட்டிவ் கட்சியே பருவத்தால் மூத்தது. டோரி கட்சி"யிலிருந்து வெளி யேறிய டிஸ்ரேலி என்பவரும், அவருடன் சேர்ந்து வெளியேறிய சிலரும் 1830-ல் கன்சர்வெட்டிவ் கட்சி”யைத் தோற்றுவித்தனர். பருவத்தால் இவற்றிற்கடுத்த இடத்தில் இருக்கிறது இந்தியாவிலுள்ள காங்கிரஸ் கட்சி, அதனால், காங்கிரஸ் நூற்றாண்டு நிறைவு விழா உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க மகத்தான நிகழ்ச்சியாகும் என்பதை அதன் எதிர்க்கட்சிகளும் ஒப்புக் கொள்ளும் என்பதில் ஐயமில்லை . 1947 ஆகஸ்டு 15ல் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தது. பின், 1950 சனவரி 26ல் அரசியல் நிர்ணயமன்றம் தயாரித்தளித்த அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன் விளைவாக, இந்திய தேசியக் காங்கிரசானது. இந்திய அரசியல் கட்சிகளிலே ஒன்று என்று ஆகிவிட்டது. இது காங்கிரசுக்கு ஏற்பட்ட தாழ்வு அல்ல, ஜனநாயக நெறிப்படி ஏற்பட்ட நிலை