உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழன் இதயம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

-: தமிழன் இதயம் : உலகம் வாழ்க! கவிபாடிப் பெருமை செய்யக் கம்பனில்லை கற்பனைக்கிங் கில்லையந்தக் காளி தாசன் செவி நாடும் கீர்த்தனைக்கு தயாக ரில்லை தேசீய பாரதியின் திறமும் இல்லை புவிசூடும் அறிவினுக்கோர் புதுமை தந்து புண்ணியமும் கண்ணியமும் புகழும் சேர்ந்த உவமானம் வேறெவரும் உரைக்க வொண்ணா உத்தமராம் காந்தியரை உவந்து பேச சொல்லுவது எல்லார்க்கும் சுலபமாகும் சொன்னபடி நடப்பவர்கள் மிகவும் சொற்பம் எல்லையின்றி நீதிகளை எழுது வார்கள் எழுதியது பிறருக்கே தமக்கென் றெண்ணார் தொல்லுலகில் நாமறிந்த தலைவர் தம்முள் சொன்னதுபோல் செயல் முயன்றார் இவரைப் போல இல்லையெனும் மோகனதாஸ் கரம்சந்த் காந்தி இந்தியத்தாய் உலகினுக்கேஈந்த செல்வம். கொலைகளவு பொய்சூது வஞ்ச மாதி கொடுமைகளே வித்தைகளாய் வளர்த்துக் கொண்டு தலைசிறந்த பிறவியென்னும் மனித வர்க்கம் சண்டையிட்டு மடிவதனைத் தடுக்க வேண்டி 29)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/30&oldid=1448614" இலிருந்து மீள்விக்கப்பட்டது