உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய தீபம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பத்துப்பாட்டும் அவற்றின் காலமுறையும் பத்துப்பாட்டு என்பது மிகப் பழைய பத்துச் செய்யுட் கள் அடங்கிய ஒரு தொகுதி நூலின் பெயர். இப்பெயர் முதன்முதலில் மயிலைநாதருரையில் (நன்னூல் 387) தரப்பட்டு உளது. தொல்காப்பியத்திற்கு உரையிட்ட பேராசிரியர் இத்தொகுதியைப் ' பாட்டு ' என்றே வழங்கினர் (செய்யு ளியல், 50, 80 உரை). இதன் உள்ளுறையான நூல்கள்" இன்னவென்பது, முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சி-மருவினிய கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து என்ற பழஞ்செய்யுளால் விளங்கும். இந்நூல்கள் சங்க காலத்துப் புலவர்களால் இயற்றப்பெற்றுச் சில நூற்றாண்டு கட்குப் பின்னர்த் தொகுக்கப்பட்டன. பத்துப்பாட்டு என்ற பெயரும், தொகுக்கப்பட்ட பின்னரே வழங்கத் தொடங்கியிருத்தல் வேண்டும். இப்பெயர் -வழக்கு நிலைத்து விட்ட பின்னர்ப் பன்னிருபாட்டியலார், நூறடிச் சிறுமை நூற்றுப்பத் தளவே1 ஏறிய அடியின் ஈரைம் பாட்டுத் தொகுப்பது பத்துப் பாட்டெனப் படுமே (226) 1. ஆசிரியப் பாட்டின் அளவிற் கெல்லை ஆயிரம் ஆகும் இழிபு மூன்றடியே (செய்யுளியல், 150) என் றனர் தொல்காப்பியரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/13&oldid=1453072" இலிருந்து மீள்விக்கப்பட்டது