பக்கம்:அழகர் கோயில்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

278 அழகர்கோயில் சடாவர்மன் முதலாம் குலசேகரபாண்டியனின் காலத்துக் கல் வெட்டொன்று குலசேகரன் மடம் என்ற ஒரு மடத்தினைக் குறிப் பிடுகிறது. முத்தூற்றுக் கூற்றத்துக் கப்பலூரான உலகளந்த சோழ நல்லூர் முனையதரையனான சீராமன் உய்யவந்தான், 'சுந்தரத் தோள்விளாகம்' என்ற சிற்றூரை, குலசேகரன் மடத்தில் ஆடி, ஐப்பசி, மார்கழித் திருநாட்களில் பிராமணர்களை உண்பிப்பதற்காகக் கொடுத்துள்ளான். மானவராயர் வேண்டுகோளின்படி திருக்கானப் பேர்க் கூற்றத்து ராஜராஜநல்லூரான சுந்தரத்தோள்விளாகத்தின் சில நிலங்களை, மன்னன் இறையிலியாக மாற்றிக்கொடுத்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. 32 திருக்கானப்பேர் இன்று சிவகங்கை வட்டத்தில் காளையார் கோயில் என்ற பெயரோடு விளங்குகிறது. இரண்டாம் திருச்சுற்றில் தூண்களால் மறைக்கப்பட்டுள்ள பிற்காலப் பாண்டியர் கல்வெட்டொன்று இங்கிருந்த திருநாடுடை யான் மடத்தில் ஏகா(ங்)கி ஸ்ரீவைஷ்ணவர்களையும், திரிதண்டி முக்கோல்) சன்யாசிகளையும் உண்பிக்க சில நிலங்களை மன்னன் இறையிலியாக மாற்றியதைக் குறிப்பிடுகிறது." இரண்டாம் திருச்சுற்றின் மேற்குச் சுவரில் வெளிப்புறமாக உள்ள ஒரு கல்வெட்டு, அமைத்த நாராயணன் மடத்திலும் வாணாத ராயன் மடத்திலும் திரிதண்டி சன்னியாசிகளையும் அனுவிக ளையும் உண்பிப்பதற்குத் தரப்பட்ட இறையிலி நிலக்கொடை மீனைக் குறிப்பிடுகின்றது.34 மகா சகம் 1511 (கி.பி. 1589) இல் எழுந்த வெங்கடேஸ்வர ராஜாவின் கல்வெட்டொன்று. அவர் சுந்தரத்தோளுடையான் மாவலி வாணாதிராயர் வேண்டுகோளின்படி, பன்னிரண்டு வைஷ்ணவர்களை உண்பிப்பதற்குக் கவுண்டன்பட்டியான ராமானுஜநல்லூரில் சில நிலங் களைத் தந்ததைக் குறிப்பிடுகிறது சகம் 1578 (கி.பி. 1656) இல் எழுந்த ஒரு கல்வெட்டு திரு மாலிருஞ்சோலை வெள்ளானன் நல்ல நயினாப்பிள்ளை மகன் அண் ணாவிப் பெருமாபிள்ளை, ஆடித்திருவிழாவில் சில மண்டபங்களின் செலவுக்கும். இத்திருவிழாவில் பத்து நாட்களும் 'இயற்பா' ஓதும் ஸ்ரீவைஷ்ணவர்களை உண்பிப்பதற்கும் இரண்டு சிற்றூர்களை விட்ட செய்தியினைத் தருகிறது.36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/285&oldid=1468162" இலிருந்து மீள்விக்கப்பட்டது