உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரன் மயிலப்பன் - - 2 11

20. மிட்டாதார் :

இதுவும் பாரசீக மொழிச்சொல். ஒரு குறிப்பிட்ட பகுதியின் பொறுப்பில் உள்ளவரை குறிப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. மிராசுதார், நிலான்தார், ஜமீன்தார் போன்ற சொற்களைப் போன்று ஆர்க்காடு நவாப்பின் நிர்வாகத்தில் வழக்குப் பெற்றதாகும்.

21. தேஷாந்திரி :

வைணவ சமய சம்பிரதாயப்படி தேசங்கள் என்பது வைணவர்களுக்கே உரிய சிறந்த தலங்களைக் குறிப்பிடுவது ஆகும். குறிப்பாகவடக்கே உள்ள பதரி ஆஸ்ரமத்திலிருந்து தெற்கே வேணாநாடு என்று அழைக்கப்பட்ட திருவனந்தபுரம் வரையான 108 திருப்பதிகளில் ஒன்றைக் குறிப்பதாகும். தேஷாந்திரி என்ற வட சொல்லுக்கு இந்த திருத்தலங்ளுக்கெல்லாம் சென்று வருகின்ற பரம வைணவர் என்பது பொருள். கி.பி.11-ஆம் நூற்றாண்டில் திருப்புல்லாணியில் இருந்த திருப்புல்லாணி தாவிர் என்ற தேஷாந்திரி வடக்கே திருவேங்கடம் சென்று திருப்பதி பெருமானது ஆலயத்தின் மகா மண்டபத்தை திருப்பணி செய்தார் என்று அங்குள்ள கல்வெட்டு தெரிவிப்பதும், அதே தேஷாந்திரி தெற்கேயுள்ள திருநெல்வேலிச்சீமை ராஜேந்திர விண்ணகத்தில் உள்ள கனவிக்கு இனிய பெருமாளது திருக்கோயிலைத் திருப்பரிை செய்திருப்பதையும், கல்வெட்டுக்களில் காணப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.