உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - -- 4.5 மாவீரன் மயிலப்பன்=

சென்று பின்னர் திரும்புவதுமாக இருக்கும். இந்தப் பழக்கம் இன்றும் தொடர்கிறது. இராமநாதபுரத்திற்கு தெற்கே உள்ள இடைக்குடி மக்கள் செம்மறி ஆட்டுக் கிடைகளை சோழ நாட்டிற்கு ஆண்டுதோறும் ஒட்டிச் சென்று வருகின்றனர்.

சோழ சீமை வெள்ளான்குண்டில் தங்கி இருந்த சித்திரங்குடி சேர்வைக்காரர் விவசாயக் கூலியாக வேலை பார்த்து, அதில் கிடைக்கும் ஊதியத்தில் வாழ்க்கையைக் கழித்து வந்தார். என்றாலும், இரவு நேரங்களில் அவரால் உறங்க முடியவில்லை. பிறந்த மண்ணின் சிந்தனைகள் அவரது உறக்கத்தை ஒட்டிவிடும். சேதுபதி

மன்னரோ சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார். இந்த அவலநிலையை மாற்றி மன்னரை விடுதலை செய்யுமாறு நிர்பந்திக்கத் திரட்டப்பட்ட மக்கள் கிளர்ச்சி, துரோகத்தின் முன்னால்

கும்பெனியாரது வெடி மருந்துத் திறனை வெற்றி கொள்ள முடியாமல் தோல்வியைத் தழுவி விட்டது. அடக்கு முறையிலும் பலவித இழப்பீடுகளிலும் தளர்ந்து போன மக்களை மீண்டும் திரட்டுவது எப்படி? திரட்டிய மக்களைக் கொண்டு கும்பெனி நிர்வாகத்திற்கு எவ்விதம் கடைசி மரண அடி கொடுப்பது? அதற்குரிய உத்திகள் єтєвоєц?

இத்தகைய சிந்தனைகளில் அவரது இரவு நேரம் முழுவதும் கழிந்து விடும். விடியலுக்கு கோழி அடுத்தடுத்து கூவும் ஓசை. அத்துடன் அன்றைக்கு மேற்கொள்ள வேண்டிய வேலைகளின் நினைவு அவரைப் படுக்கையை விட்டு எழுந்து விடச் செய்யும். இவ்விதம் இரண்டு மாதங்கள் ஓடி மறைந்து விட்டன.

இவ்விதம் உறக்கமே இல்லாமல் எத்தனை இரவுகளைக் கழிப்பது? அந்த இரவுகளில் மூலை முடுக்குகளில் ஒளிந்து கொண்டிருக்கும் இருளின் பரந்த கரங்களைப் பற்றி எத்தனையோ சிந்தனைகள். மறவர் சீமையின் எதிர்காலம் பற்றிய கனவுகள். என்ன பயன்? இவைகளுக்குக் கிடைத்துள்ள பரிசு குடிமக்களுக்கு ஏற்பட்ட