பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

- மறவர் சீமை

அல்லவா?

மீண்டும் சேர்வைக்காரர் காடல்குடிக்கு வந்து அங்கிருந்து

கமுதியையும், மண்டலமாணிக்கத்தையும் சுற்றிக்கொண்டு சிவகெங்கைச் சீமை நெட்டுர் வழியாக தொண்டிக்கும் பின்னர்,

வடக்கே சோழ நாட்டிற்கும் சென்றார். திருநெல்வேலிச் சீமையிலிருந்து ஒரு நெடுஞ்சாலை. மறவர் சீமையின் திருச்சுழியில் பார்த்திபனூர், காளையார்கோவில், தொண்டி,

சுந்தரபாண்டியன்பட்டினம் வழியாகக் கிழக்குக் கடற்கரையை ஒட்டி சோழ நாட்டிற்கு ஒரு வழி இருந்தது. இதனையே வணிகர்கள் தங்கள் வியாபாரப் பொருட்களை எடுத்துச் செல்லப் பயன்படுத்தினர். இந்த வழியில்தான் மயிலப்பன் சேர்வைக்காரரும் ஒரு இடையரைப்போல தலையில் முண்டாசும், இடையில் வேட்டியும், தோள்களைச் சுற்றிக் கம்பளப் போர்வையும், ஒரு கையில் ஆடு விரட்டும் கம்புமாக மாறு உடையில் சென்றார். யாரும் சந்தேகப் படாதவாறு நடந்து சென்றார். அங்கு வெள்ளான்குண்டு என்ற சிற்றுாரில் தங்கினார்.

மறக்குடித்தலைவர் இடைக்குடி மகனாக மாறுவேடம் புனைந்து சென்றதற்குக் காரணமும் இருந்தது. மறவர் சீமையின் தென்பகுதியில் உள்ள இடைக்குடி மக்கள், இளவேனிற் காலமாகிய சித்திரை, வைகாசி மாதங்களில் தங்களது ஆட்டுக்கிடைகளை மேய்த்தவாறு சோழச் சீமைக்குச் செல்வார்கள். அவர்களில் தெற்கத்தியர், நாட்டு இடையர், சிவிகையர், சிறுதாலி கட்டி என்று பலவகைப் பிரிவுகள் இருந்தாலும், அவர்கள் "பெண்டுக்கு மேக்கி" என்று அழைக்கப்பட்டனர். இதனால் "ஆட்டை மேய்த்ததும் ஆயிற்று, அண்ணனுக்கு பெண்ணு பார்த்ததும் ஆச்சு" என்ற வழக்கு ஏற்பட்டது. சோழ நாட்டு வடபகுதிவரை சென்றுவிட்டு, ஆங்காங்கு வயல்களில் கிடைகளை அடைய வைத்தற்கான கூலி நெல்லையும் பெற்றுக் கொண்டவர்களாக, ஆடி பதினெட்டாம் பெருக்கிற்கு முன்னர் ஊர் திரும்பி விடுவர். சித்திரைக்கும், ஆனி மாதங்களுக்கும் இடையில் நூற்றுக் கணக்கில் செம்மறி ஆட்டுக் கிடைகள் வடக்கு நோக்கிச் சோழ நாட்டிற்குச்