பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ഥrഷങ്ങ ശിഥങ്ങ=ു

சாய்ந்த பிறகு வீடு திரும்பி வந்ததால் யாரும் அங்கு அவரை இனம் கண்டு கொள்ள இயலவில்லை. இதற்கிடையில் ராமுக்கோனார் ஒரு ஆளைச் சித்திரங்குடிக்கு அனுப்பி வைத்து அங்குள்ள நிலைமையை ரகசியமாக தெரிந்து வருமாறு அனுப்பி வைத்தார். அந்த நபர் இரண்டு நாட்களில் திரும்பி வந்து சித்திரங்குடி கிராமம் அமைதியாக இருப்பதாகவும் அங்கு ஏற்கனவே பலமுறை கும்பெனிச் சிப்பாய்கள் வந்து அவரைத் தேடிச் சென்ற செய்தியைத் தெரிவித்ததுடன் இராமநாதபுரம் கோட்டைச் சிறையிலிருநது விடுதலைபெற்ற அவரது மனைவியும் தமக்கையும் ஆகிய இருவரும் தற்போது சித்திரங்குடியிலுள்ள அவரது வீட்டில் இருப்பதாகவும், அவரது மனைவிக்கு ஏதோ சுகவீனம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிந்து வந்த செய்தியை ராமுக் கோனாரிடம் அந்த ஆள் தெரிவித்தார். இதுபற்றி இரணடு மூன்று நாட்களாக மயிலப்பன் சேர்வைக்காரரும் ராமுக் கோனாரும் மேய்ச்சலுக்கு ஆட்டுக் கிடைகளை ஒட்டிச் செல்லும் பொழுது கலந்து யோசித்தனர்.

சித்திரங்குடிக்குச் சென்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. சுகவீனமுள்ள மனைவியைப் பார்த்து வருவதா? வேண்டாமா? அவ்விதம் சென்றால் அங்கு அவருக்கு ஆபத்து எதுவும் எற்படுமா? அப்படி ஏற்பட்டால் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள அவர் என்ன செய்யலாம்? என்பன போன்ற கேள்விகளுக்கு அவர்கள் இருவரும் விடைகாண முயன்றனர். முடிவு மயிலப்பன் சேர்வைக்காரர் இரவு நேரத்தில் சித்திரங்குடிக்குச் சென்று வீட்டிலுள்ளவர்களை ரகசியமாக சந்தித்துவிட்டு திரும்ப வருவது என்பது.

அப்பொழுது மழைக்காலம் முடிந்து கோடைகாலம் தொடங்கியிருந்ததால் சித்திரங்குடிக்கும் மணலுாருக்கும் இடைப்பற்ற காட்டாற்றில் முழங்காலளவு மட்டும் தண்ணி மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது. இந்த மனலூர் அகத்தார் இருப்பிலிருந்து கிழக்கே முதுகளத்துார் செல்லும் ஒற்றையடிப் பாதையில் அமைந்திருந்தது. ஒரு நாள் அதிகாலை வேளையில்