பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
V



தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை
டாக்டர் இரா. நாகசாமி எம். ஏ., பிஎச். டி., அவர்களின்
அணிந்துரை

விடுதலைப் போரில் சேதுபதி மன்னர்' என்ற டாக்டர் எஸ். எம். கமால் எழுதிய இந்த நூல் ஒரு அருமையான வரலாற்று நூல். ஆழ்ந்த ஆராய்ச்சியும், தெளிவான சிந்தனையும், இனிய வீறுகொண்டு எழச் செய்யும் நடையும், தக்க சான்றுகளின் ஆதார அடிப்படைக் குறிப்பும், தொகுத்துரையும் உள்ள இந்நூல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்துகிறது எனில் அது மிகையல்ல. ஆங்கில கும்பினியாரின் ஆதிக்கத்தில் சிக்கித் தவித்த தமிழகத்தின் வரலாற்றில் வீர உணர்வோடு, நியாய அடிப்படையில் எதிர்க்குரல் கொடுத்த இராமநாதபுரம் சேதுபதி மன்னரின் வரலாறு, இறுதியில் சென்னை சிறையில் ஆங்கிலேயரால் அடைக்கப்பட்டு, உடல் நலம் குன்றி 23, 24-1-1809 அன்று இரவு வரலாற்றில் வாழும் பொன்றாத புகழ் உடம்பு எய்திய' இம்மன்னரைப் பற்றி இதைக் காட்டிலும் சிறப்பாக வேறு ஒரு நூல் எழுத இயலாது என்னும் அளவிற்கு ஒப்பொரும் நூலாக கமால் அவர்கள் இதனைப் படைத்துள்ளார்கள்.

பல்வேறு ஆவணங்களை, மாவட்ட மான்யுவல்களை மிலிட்டரி குறிப்புகளை ஆய்ந்து படித்து அற்புத தமிழில் வடிக்கப்பட்ட இந்நூலில் ஆங்காங்கே அன்றிருந்த வாணிகம், வாணிகப் பொருட்கள், அதற்குக் கிடைத்த லாபமும், கூலியும், அன்றிருந்த நாணய மதிப்புகள் முதலியன சிறப்புற வடிக்கப்பட்டுள்ளன. சேதுபதி மன்னரை கும்பினியார் வஞ்சகமாய் கைதாக்கி திருச்சிக்கு அனுப்பியபோது அன்றிருந்த மறவர்களின் மனக்குமுறல்களை ஆசிரியர் இந்நூலில் கொட்டியிருக்கிறார் (பக்கம் 88). அதைப் படிக்கும்போது நாம் வீறு