பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நினைப்பும் சரீரமும் ஆரோக்கியமும்.

இகழ்ச்சியும் சந்தேகமும் பொறாமையும் பொருந்திய நினைப்புக்களில் இடைவிடாது வாழ்ந்துகொண்டிருத்தல், தானே உண்டாக்கிக்கொண்ட சிறையில் அடைபட்டிருத்தலை ஒக்கும். ஆனால், எல்லோரையும் நல்லவராக நினைத்தலும், எல்லோரோடும் உற்சாகமாயிருத்தலும், எல்லோரிடத்துமுள்ள நன்மைகளைக் கண்டறியப் பொறுமையுடன் முயலுதலுமாகிய சுயநயமற்ற செயல்களே மோக்ஷவீட்டின் வாயிலாகும்; ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிராணியிடத்திலும் சமாதானமான நினைப்புக்களைக் கொண்டு வாழ்தல் அந்நினைப்புக்களை உடையார்க்கு அளவற்ற அமைதியைக் கொடுக்கும்.

"அறவி னைக்கும் அரும்பொருள் இன்பொடு
பெறுவ தற்கும் பெருங்கல்வி கற்றுயர்
விறலி னுக்கும்நல் வீரம் தனக்கும்ஒண்
துறவி னுக்கும் துணைமன என்பவே. "

45