உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நினைப்பும் காரியசித்தியும்.

படுத்தித் தன் சதாசாரத்தை மேன்மேலும் விர்த்தி செய்ய இடைவிடாது முயலவேண்டும்.

ஞானத்தை அடைவதற்கென்றோ அல்லது பிர கிருதியிலும் வாழ்க்கையிலு முள்ள ரசங்களையும் உண்மைகளையும் கண்டறிவதற்கென்றோ ஒப்புக் கொடுக்கப்பட்ட நினைப்பின் பலனாக விவேகசித்திகள் உண்டாகின்றன. அத்தகைய சித்திகள் சிலசமயங்களில் வீண்பெருமையோடும் பேராசையோடும் சம்பந்தப்பட்டிருக்கலாம்; ஆனால், அவை அக்குணங்களிலிருந்து உண்டானவையல்ல ; அவை சுயநயமற்ற பரிசுத்த நினைப்புக்களினின்றும் நீடித்த அரிய முயற்சிகளி னின்றும் இயல்பாயுண்டானவை.

ஆன்மசித்திகள் பரிசுத்தமான நாட்டங்களின் பூரண பலன்கள். எவன் இடைவிடாமல் மேன்மையுள்ள நினைப்புக்களையும் சிறந்த நினைப்புக்களையும் நன்கு கொண்டு வாழ்கிறானோ, எவன் பரநயமும் பரிசுத்தமு முள்ள பலவற்றிலும் நினைப்பைச் செலுத்து அவன், சூரியன் உச்சமடைவதும் சந்திரன் பூரண வடிவை அடைவதும் எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக, ஞானத்தையும் ஒழுக்கமேம் பாட்டையும் அடைவான் ; அன்றியும் அவன் செல் வாக்கும் இன்பமுமுள்ள ஸ்தானத்திற்கு உயர்வான்.

எவ்வகையான காரிய சித்தியும் முயற்சியின் முடியும் நினைப்பின் மகுடமு மாகும். தன்னடக்கம், நியாம், ஆன்மசுத்தி, நீதி, நிறை என்பவற்றின் உதவியால்

55