மனம் போல வாழ்வு.
மனிதன் உயர்கிறான்; சிற்றின்பஇச்சை, சோம்பல், மனத்தீமை, அசுசி, மனக்குழப்பம் என்பவற்றால் மனிதன் தாழ்கிறான்.
ஒருவன் இவ்வுலகத்தில் மிகவுயர்ந்த ஸ்தானத்திற்கும் ஆன்ம உலகத்தில் மிகவுயர்ந்த பதவிகளுக் கும் உயரலாம். பின்னர் கர்வமும் சுயநயமும் அயோக் கியதையும் பொருந்திய நினைப்புக்களுக்கு கொடுத்துப் பலஹீனமும் துன்பமும் நிறைந்த நிலை களுக்குத் தாழலாம்.
நியாயமான நினைப்பால் பெறப்பட்ட வெற்றிகளை எச்சரிக்கையோடு போற்றிக் காக்கவேண்டும். வெற்றிபெறுகிற சமயத்தில் அங்ஙனம் செய்யாமல் அநேகர் திரும்பவும் தோல்வி அடைகின்றனர்.
தொழிலுலகம் புத்தியுலகம் ஆன்மவுலகம் இவற்றில் எதிலானாலும் பெறுகின்ற சித்திகள் குறித்த வழிகளில் சரியாகச் செலுத்தப்பட்ட நினைப்பின் பயனாகக் கிடைக்கின்றன: அவை யெல்லாம் ஒரே நியதியால் ஆளப்படுகின்றன: அவையெல்லாம் ஒரே தன்மையனவா யிருக்கின்றன ; வித்தியாசமெல்லாம் பெற்ற பொருளில் உள்ள வித்தியாசமே. சிறிய சித்தி பெற விரும்புகிறவன் சிறிது கஷ்டப்படல்வேண்டும்; பெரிய சித்தி பெறவிரும்புகிறவன் பெரிது கஷ்டப்படல் வேண்டும்; அதி உன்னதமான நிலையை விரும்புகிறவன் அதிகமாகக் கஷ்டப்படல் வேண்டும்.
56