________________
vii 8. "ராமாயணக் கதை யென்பது வட இந்திய ஆரியர் கள் தென் இந்திய 'தஸ்யூ'க்கள் அல்லது திரா விடர்கள் மீது படையெடுத்து வெற்றிபெற்றதைச் சித்தரிப்பதாகும் 9. பி. சிதம்பரம் பிள்ளை, B.A.,B.L. "திராவிடரும் ஆரியரும்" (பக்கம் 24) "ஆரியர்களின் ஒழுக்கஈனமான செயல்களில் குடிப் பதும் சூதாடுவதும் சிறந்தவைகளாகும். இவை இரண்டையும் நிரூபிக்க ரிக்வேதத்தில் அதிகச் சான்றுகள் இருக்கின்றன.' ராகோஸின், "வேதகால இந்தியா 10. "ராமாயணக் கதையானது, புரோகித வகுப்பாருக் கும் யுத்தவீரர் கூட்டத்திற்கும் உண்மையாகவே கடந்த சச்சரவையும் சண்டையையும் குறிப்பதாகும். இவ்விஷயமானது இலக்கிய உருவத்தில் உபநிஷத் துக்களிலுமிருக்கிறது. ராமன் தென் இந்தியாவி லுள்ள ஆரியரல்லாத கூட்டத்தோடு நட்புக் கொண்டான். அவர்களே குரங்குகளென்றும், காடி களென்றும் வர்ணிக்கப்பட்டிருக்கிறார்கள்" ரொமேஷ் சந்தர் டட், I.C.S., C.I.E., 'பண்டைய இந்தியாவின் நாகரீக வரலாறு' (பக்கம்- 139,141) 11. "ராமாயணக் கதை காலத்தில் தென் இந்தியா முழுதும் ஆரியரல்லாதார் வசித்து வந்தார்கள். இவர்களைத்தான் ராமாயணத்தின் ஆசிரியர் குரங்குகளென்றும் கரடிகளென்றும், லங்கையி லுள்ள ஆரியரல்லாத மக்களை அசுரர்களென்றும் வர்ணித்து எழுதி வைத்தார்" ரோமேஷ் சந்தர் டட், I.C.S., C.I.K.; "புராதன இந்தியா' (பக்கம்- 52)