இணையற்ற வீரன் ஆரியப் பூண்டைக் கிள்ளி எறியாததால் இன்று கோடரிகொண்டு பிளக்கவேண்டிய சிரமம் ஏற்பட்டு விட்டது. முனிவர் என்றும், ரிஷிகள் என்றும் பெயர் வைத்துள்ள ஆரியப் பாதிரிகளே இதில் முன் னின்று வேலை செய்கிறார்கள். அதிருக்கட்டும். நாழிகையாகிறது-உணவருந்தலாம் - வருத்தந் தணி. சீக்கிரம் குமாரன் வந்துவிடுவான். அத்தியாயம் 4. —— 2.8 இடம்: காட்டுப்புறத்திலுள்ள கூடாரத்தின் பக்கத்தில் ஒரு தனித்த இடம். பாத்திரங்கள்: ப்ரகலாதன், காங்கேயன், கஜகேது,சித்த பானு, மகரிஷி ஒருவர். காங்கேயன்:- என்னையும் கூடாரத்திலுள்ள மற்றும் உனது உடற்காப்பாளரையும் இங்கு விட்டு விட்டு இத்தனை நாள் எங்கே போயிருந்தாய்? ப்ரகலாதன்:- நீயும் நானும் சற்றுத் தூரத்திலுள்ள சிங்காரவனத்திற்குச் சென்றோமல்லவா? காங்கேயன்:- நீ என்ன கணவா கண்டாய்? சிங்கார வனத்திற்கு நானுமா வந்தேன்? ப்ரகலாதன்:- இன்னும் அதிக ளள் ஆகவில்லையே? அதற்குள் மறந்தாயே! காங்கேயன்:- நான் மறந்துவிடவில்லை. நீதான் ஏதே தோ உளறுகிறாய்.
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/42
Appearance