அத்தியாயம் 6. - இடம்: சித்ரபானுவின் வீட்டுப் பூஜை விடுதி. பாத்திரங்கள்: சேனாதிபதி, சித்தபாது. சித்ரபானு:- (சேனாதிபதி பிரவேசிக்கக்கண்டு] வது வேண்டும்; வரவேண்டும். தங்களை உபசரிக்கவும் எனக்குச் சக்தியில்லாமலிருக்கிறது. சேனாதிபதி:- காதலி! என்ன நூதனம்! இதென்ன மஞ்சள் உடை உடுத்தியிருக்கின்றாய்? சித்ரபானு:- எல்லாம் தங்கள் பொருட்டே. என்ன செய்வேன்? நான் உலகில் என் பிறக்தேனோ தெரிய வில்லை? எனது பெற்றோரிடம் நான் உங்கள்மேல் காதல் கொண்டுவிட்டதாகவும், உங்களைத்தான் மணப்பேன் என்பதாகவும், எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் அவர்கள் சம்மதிக்கமாட்டோம் என்கி நார்கள். காரணம் நீங்கள் தமிழர் என்பதுதான். அவர்கள் அபிப்பிராயம் நமக்கு அனுகூலப்படும். பொருட்டே நான் கௌரி தேவியை நோக்கி விரதம் பூண்டுள்ளேன். இன்னும் என் விரதம் முடிய வில்லை. சேனாதிபதி:- நான் தமிழனே; சக்தேகமில்லை. ஆயி னும் எசன் ஆரிய வேதத்தையும் மதத்தையும் அங்கீ கரித்து வருகிறேன். இன்னும் என் மீது சக்தேகம் என்ன? உன்மீது வைத்த கரதலால் நாளுக்கு காள் என் உடல் துரும்பாகி வருவதை கி அறிய வில்லையா?
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/55
Appearance