பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

எஸ். எம். கமால்

மன்னர்களுக்கும் ஏற்கனவே ஒரு கசப்பான தொடர்பு இருந்தது இராமநாதபுரம் மன்னராக இருந்த ராஜ சூரிய சேதுபதி, கி.பி 1672-ல், தஞ்சைக்கும் மதுரைக்கும் நிகழ்ந்த போரில் தஞ்சை மன்னருக்கு உதவுவதற்காக திருச்சிப் பகுதிக்குச் சென்றார். மதுரை மன்னரது தளபதியான வேங்கட கிருஷ்ணப்பா, சேதுபதி மன்னரைச் சூழ்ச்சி செய்து திருச்சிராப்பள்ளிக் கோட்டைக்கு அழைத்துச் சென்று, நயவஞ்சகமாக அங்கு சிறையில் அடைத்ததுடன் அங்கேயே கொன்று போட்டார்.[1] அந்த நிகழ்ச்சிக்கு சரியாக நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த சேதுபதி மன்னர் மீண்டும் திருச்சிக் கோட்டையில் சிறை வைக்கப்பட்டார்.


ஆற்காட்டு நவாப் முகமது அலியின் ஆசைக்கனவு ஒரு வகையாக நிறைவேறியது. இராமனாதபுரம் கோட்டையைக் கைப்பற்றி மறவர் சீமையை தமது சர்க்கார் சீமையாக ஆக்க வேண்டும் என்பது அவரது கடந்த இருபது வருட கால உள்ளக் கிடைக்கையாக இருந்தது. என்றாலும் . நாட்டின் பல்வேறு சூழ்நிலைகள் அவரை இத்தகைய தீவிர நடவடிக்கையுடன் மறவர் சீமைக்குள் புகுவதைத் தடுத்து வந்தன. கி.பி. 1752-ல், தமது எதிரியான சந்தாசாகிபுவை தீர்த்துக்கட்டிய பிறகும் அடுத் தடுத்து பல தலைவலிகள் அவரைத் தழுவி நின்றன. மதுரை நாயக்கர்களுக்கு முன்னுறு ஆண்டுகளுக்கு மேலாக கட்டுப்பட்டு இருந்த நெல்லைச் சீமைப் பாளையக்காரர்கள், ஆற்காட்டு நவாப்பிற்கு எதிராக கிளர்ந்து எழுந்தனர். அவர்களை அடக்குவதற்காக அனுப்பப்பட்ட அவரது தமையனார், மாபூஸ்கான் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து அவருக்கு உதவும் கம்பெனியாரையே எதிர்த்தார்.[2] இந்தக் கிளர்ச்சியினால் வருமானம் மிகவும் பாதிக்கப்பட்டதால், அவர்களை அடக்குவதற்காக கும்பெனியாரது போர்ச்செலவு பட்டியலில் லட்சக்கணக்கில் நவாப்பின் கடன் ஏறியது. பாளையக்காரர்களையும், மதுரைக் கள்ளர்களையும் அடக்கி, நவாப்பினது வருமானத்தை கம்மந்தான்-கான்சாகிபு வசூலித்து வந்த பொழுதிலும், அவருக்கும் நவாப்பிற்கும் இடையே எழுந்த பிணக்கு காரணமாக, கி.பி. 1763-ல் மதுரைப் போர் முடிவில் கான் சாகிபு துக்கிலே தொங்


  1. Rajaram Row. T. Ramnad Manual (1891), p. 226
  2. М. С. C., Vol. 5, (1757) p, 20, 50, 51.