உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

17

உள்ளனர்' என்ற விவரம் தெரிவித்து[1] இருந்தார் தளபதி ஜோசப்.

கோட்டையைக் கைப்பற்றிய பிறகு, இளைஞரான நவாப்பும் அரண்மனையின் ஒரு பகுதியில் அரசு குடும்பத்தினருக்கு அண்மையில் தமது இருக்கையை ஏற்படுத்திக் கொண்டார். இதுபற்றி தளபதி ஜோசப் ஸ்மித் :...கவலையில் ஆழ்ந்துள்ள அரச குடும்பத்தினருக்காக நான் மிகவும் அனுதாபப்படுகிறேன். இது, அவர்களே தேடிக் கொண்ட நிலை. நானும் நவாப்பும் நீட்டிய வேண்டுகோளை புறக்கணித்து நமது பெரும்படைக்கு எதிராக தங்கள் கோட்டையைக் காத்துக்கொள்ள முயன்ற இவர் களது தவறினை எண்ணிப் பார்க்க இயலவில்லை. அங்குள்ள கொள்ளைப் பொருள்கள் அனைத்தும் அவைகளைக் கைப்பற்றிய வெற்றியாளருக்கு உரியது என்பதை நவாப்பிடம் தெரிவித்தேன். அது அவருக்குப் பொருத்தமாக தோன்றவில்லை. என்றாலும் கோரிக்கையில் அமைந்துள்ள நேர்மையைப் புரிந்து கொண்டு அரண்மனையில் என்ன இருக்கும்? எவை பாதுகாக்கப்பட்டிருக்கும் என்பதைத் தெரிந்தவராக, அரசியாரின் இருப்பிடம் புனிதமாக மதிக்கப்பட்டு வந்ததையும் உணர்ந்து கொண்டு, படைத் தலைவர் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ஆயிரம் பணமும், அவருக்கு அடுத்துள்ள துணைத்தளபதி போன்றோருக்கு தலைக்கு அறுநூறு பணமும் வழங்க முன்வந்தார். இது ஒன்றும் மோசமான பேரம் இல்லை. ஆதலால் இதனை தங்களது ஒப்புதலின் பேரில் ஏற்றுக்கொள்ள எண்ணியுள்ளேன்...' என்று இன்னொரு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.[2]


அடுத்து, இராமநாதபுரம் அரசியாரையும், இளவரசரையும் அவரது இரு சகோதரிகளையும் பாதுகாப்புக் கைதிகளாக இராமநாதபுரத்திலிருந்து நூறு கல் தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளிக் கோட்டைக்கு அனுப்பப்பட்டனர்.[3] அப்பொழுது சென்னைக்கு அடுத்து, கிழக்கிந்திய கம்பெனியாரது பிரதான இராணுவ நிலையாக திருச்சிராப்பள்ளி கோட்டை விளங்கியது அத்துடன் இந்தக் கோட்டைக்கும் இராமநாதபுரம் சேதுபதி


  1. Mily. Cons., Vol. 42-B, 8-6-1772, p. 410.
  2. Mily Cons., Vol. 42-B, 8-6-1772, p. 489
  3. Political Despatches to England, Vol. 7–9, pp. 80–81