பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2



வில்வேர் உழவரான இநத வீர மறவர்கள, பானடியப் பேரரசில், மழவராயர், வில்லவராயர், நாடாள்வார், முத்தரையர். முனையதரையர், காங்கேயர் என்ற வீர விருதுகளுடன் சிறப்பான அரசியல் தலைவர்களாக விளங்கி வந்தனர்.[1] பின்னர் சோழ பாண்டியர்கள் ஆட்சியிலும், விஜயநகர நாய்க்கர்களின் ஆதிக்கத்தின் பொழுதும் அவர்களது அரசியல் பாதுகாவலராக இருந்து வந்தனர். வெள்ளாற்றிற்கும் வேம்பாற்றிற்கும் இடைப் பட்ட பகுதியில் வாழ்ந்த இந்த மக்கள் பன்னிரண்டாவது நூற்றாண்டில், தெற்கேயுள்ள நெல்லை மாவட்டத்துக்கு குடி பெயர்ந்ததாகத் தெரிகின்றது.[2] இவர்களில், தெற்குப் பகுதியில் இருந்தவர்கள் மதுரை நாயக்கர்களுக்கு அடங்கிய குறு நிலக்கிழார் (பாளையக்காரர்) களாக இருந்து வந்தனர். இவர்களில் சிவகிரி, சேத்துார், சிங்கம்பட்டி, சொக்கம்பட்டி, ஊத்து மலை, ஊர்க்காடு, கடம்பூர், காடல்குடி, குளத்துார், சுரண்டை , தலைவன் கோட்டை , நெல் கட்டும் செவ்வல், வடகரை பாளையக்காரர்கள் முக்கியமானவர்கள். ஆனால் கிழக்குப் பகுதியில் உள்ள மறக்குடி மக்கள் நாயக்கர்களுக்கும் கட்டுப்படாமல் அவர்களது மேல் ஆதிக்கத்தை மதித்தவர்களாக தன்னரசினராக இருந்தனர். அவர்களது தனிப்பெரும் தலைவர் தான் சேதுபதி மன்னர்.

சேதுபதி மன்னர்கள்

மறவர் மக்களுக்கிடையில் பொதுவாக எழு கிளைகள் உள்ளன.[3] அவைகளுள் செம்பி நாட்டு மறவர் கிளையைச் சேர்ந்தவர்கள் இராமநாதபுரம் அரசர்கள். இந்தக் கிளையினர், இந்து வைதீக நெறியை தீவிரமாகப் பின்பற்றியதால் பிறப்பு, இறப்பு, பூப்பு, திருமணம் போன்ற சமூகப் பழக்க வழக்கங்களில் ஏனைய ஆறு கிளைகளுக்கும் இவர்களுக்கும் இடையில் மிகுந்த வேறுபாடுகள் இருந்தன. இவர்களது விதவைகள் மறுமணம் செய்வது கிடையாது மாறாக, அவர்கள் மாய்ந்த


  1. நீலகண்ட சாஸ்திரி K. A., Ceylon Historical Journal, Vol. IV. pp. 1-4.
  2. கதிர்வேல் Dr. S., History of Marava (1977), pp. 8 & 9.
  3. Rajaram Row T. Ramnad Manual (1891), p. 33.