பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 145 இடம் தமிழக நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்திருக்கலாம். தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் பெற்றிலது. அன்றியும் தொல்காப்பியர் மக்கள் வாழ்வினைக் கூற வந்தனரேயன்றி தமிழர்க்குத் தொடர்பிலாப் பிற நாட்டினர் வாழ்க்கை கூற நூல் செய்திலர். தொல்காப்பியர்க்குப் பிற் பட்டுத் தோன்றிய திருவள்ளுவர் உழவரை உயர்ந் தோரெனச் சிறப்பித்திருக்கவும், அவர்க்கு முன்பு வாழ்ந்த தொல்காப்பியர், உழவரை - வேளாளரை- உயர்ந்தோரல்லர் என ஒதுக்கியிருத்தல் எங்ஙனம் சாலும்? ஆதலின் உரையாசிரியர்கள் நால்வகை வருணம் பற்றிக் கூறுவனவெல்லாம் தொல்காப்பியர் கொள்கைக்கும். காலத்துக்கும் முரண்பட்டன ; பொருந்தாதன என்று அறிதல் வேண்டும். பிரிவு வகைகளுள் நாடு காவல் பிரிவும், பொருள் ஈட்டும் பொருட்டுச் செல்லும் பிரிவும் உள.நாடு காவல் பிரிவு, அரசர்க்கும். அவர் குடும்பத்தினர்க்கும், அரசின் பணியினை மேற்கொண்டுள்ளோர்க்கும் உரியதாகும். தொல்காப்பியர் காலத்தில் முடி சூடிய மன்னனே ஆண்டான். ஆயினும் அவன் தனி யொருவனாக ஆண்டிலன். நல்ல அரசியல் அமைப் பும், அவ்வமைப்பில் யாவரும் பணி புரியும் வாய்ப்பும் இருந்தன. ஆகவே நாடு காவல் பிரிவு யாவர்க்கும் உரியதாய் இருந்தது. நால்வகை நில மக்களும் நன் முறையில் ஆளப் படவும், நன் முறையில் ஆளவும் உரிமையும் கடமையும் உடையராய் இருந்தனர். பொருளீட்டும் பொருட்டும் யாவரும் எங்கும் செல்லலாம். இன்ன இடத்திற்கு இன்னார் தாம் செல்ல வேண்டும் என்ற வரையறையோ கட்டுப் பாடோ கிடையாது. தொழில் முறையில் இன்ன 10-1454