முல்லைக்காடு/உலக சமாதானம்
Appearance
உலக சமாதானம்
அகிலப் பொதுச்சேனை
படை நடத்தல்
நானிலத்தின் மேனிலைக்குச்
சேனை கூட்டினோம்!-பொதுச்
சேனை கூட்டினோம்-வெறி
நாய்கள் ஒக்கப் போர்தொடுக்கும்
ஈனம் ஓட்டினோம்!- கெட்ட
ஈனம் ஓட்டினோம்.
தேனடைக்குள் ஈக்கள் ஒப்பர்
பூதலத்தினோர்!- இந்தப்
பூதலத்தினோர் - அவர்
சீவனத்திற் பேதம்வைத்துப்
பாழ்படுத்தினார்!-துஷ்டர்
பாழ்படுத்தினார்.
ஆனதுஷ்டர் தீயதன்மை
சாகடிக்கும் நாள்—முற்றும்
சாகடிக்கும் நாள்—இது
வாகும் என்று தீவிரத்தில்
வாளெடுக்கும் தோள்!—கூர்
வாளெடுக்கும் தோள்!
மேனிலைக்கண் மாநிலத்தை
ஏற்றுவிப்பீரே—விரைந்
தேற்றுவிப்பீரே—நீர்
மேல் நடப்பிர்! மேல் நடப்பீர்!!
மேல் நடப்பீரே!!!