பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16


லிருந்து உருவாகும் உரிமைகளைப் பயனுள்ள விதத்தில் பாதுகாக்கும் தன்மையை இந்த ஸ்தபனத்தில் காணக் கூடிய நாள் வரக்கூடும்."

மனிதன் நன்னெறிகளை மறுக்கிறது. போர், அறிஞர்களும் ராஜதந்திரிகளும், கலிஞர்களும், மதக்குருக்களும், எல்லாவற்றிற்கும் மேலாக வெற்றி நடை போட்டு வரும் படைத் தளபதிகளும் போரைக் கண்டிக்கிறார்கள். போர் கொடியது என்றும், மனித கௌரவத்தை மறுக்கிறது என்றும் அவர்கள் கண்டனம் செய்கிறார்கள். இருப்பினும் போருக்குப் பின் போர் ஏற்பட்டது. ஏனென்றால், போர்க்களத்தைவிடச் சிறந்ததொரு அரங்கு இருக்கவில்லை. தகராறைத் தீர்ப்பதற்கு வேட்டுச் சத்தத்தைவிடச் சிறந்ததொரு வாக்குவாதம் இருக்கவில்லை. தகராறைத் தீர்த்து உரிமையை நிலைநாட்ட வேறு வழிபிறக்கவில்லை.

ஐ.நா ஸ்தாபனம் இன்றைய அரங்காக விளங்குகிறது. இது முற்றிலும் போதுமானது என்று சொல்ல முடியாது. ஆனால் பேச்சுக்களினாலும் அதன்படி நடந்து செயல் புரிவதனாலும் போரைத் தவிர்த்துத் தகராறைத் தீர்ப்பதற்கான ஒரே அரங்காக இருக்கிறது. உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் தங்களைப் பிரிக்கும் பிரச்சினைகளை ஆராய்கிறார்கள். உலக மக்கள் முன் தங்கள் நிலையை எடுத்துக் கூறுகிறார்கள். மனிதர்களைக் கொலை செய்வதற்குப் பதிலாகத் தங்கள் நிலைக்காக வாதாடுகிறார்கள்.

உறுப்பு நாடுகள் தங்களுக்கிடையே உண்டான உறவு முறைகளில் பின்பற்ற வேண்டிய நெறியை ஐ.நா வகுக்கிறது.

தகராறுகளைத் தீர்ப்பதற்காக ஐ.நா. ஸ்தாபனம் சமாதானத் தூதுவர்களை அனுப்புகிறது. உறுப்பு நாடுகள் தகராறுகளைத் தீர்ப்பதற்காக இந்த முறையை ஏற்றுக் கொண்டுள்ளன என்பதே வரலாற்று முக்கியத்துவம்