உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திவ்யப் பிரபந்த அருஞ்சொல் அகராதி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திவ்யப் பிரபந்த அருஞ்சொல் அகராதி

முகவுரை

மனத்திலோர் தூய்மையில்லை வாயிலோர் இன்சொலில்லை
சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன்வாளா
புனத்துழாய் மாலையானே பொன்னிசூழ் திருவரங்கா
எனக்கினிக் கதி என்சொல்லாய் என்னையாளுடைய கோவே.

தொண்டரடிப்பொடியாழ்வார்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பக்தி வெள்ளம் தமிழகம் எங்கும் பெருகிப் புதியதொரு கிளர்ச்சியை எழுப்பியது. அக்காலத்தில் பக்தரும் முக்தரும் இறைவனது பக்தி வெள்ளத்தில் மூழ்கி ஆனந்தத்தினால் பல படியாகப் பாடியும் ஆடியும் எங்கும் சென்றனர். மதிநலஞ்சான்ற பெரியோர்கள் பலர் நாவினின்றும் பல தெய்வக்கவிகள், சிறப்பு மிக்க பாடல்கள் ஞானக்கலைகள் மலர்ந்தன. அவை அடியார்கள் அருளிய தேவார, திருவாசகம் முதலியனவும், ஆழ்வார்கள் அருளிய திவ்யப் பிரபந்தங்களுமாகும்.

ஆழ்வார்கள் அருளிய நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் வைணவர்களது தமிழ்வேதமாக விளங்குகிறது. இதில் வேதம், இதிகாசம், பாகவதம் முதலிய புராணங்கள் முதலியவற்றில் புதைந்து கிடக்கின்ற அர்த்த பொதிந்து கிடக்கின்றன. முக்காலமும் உணர்ந்த முனிவர்கள் வாய்மொழிகளில் காணப்படும் சுவையின் சாராம்சங்கள் எல்லாம் திவ்யப் பிரபந்தங்களில் காணலாம்.

ஆழ்வார்களின் அருளிச் செயல்களைப் பெரியோர்கள் திவ்யப்பிரபந்தங்கள் என்னும் சிறப்புப் பெயரால் விசேடித்துக் கூறி வருகின்றார்கள். இந்நூல் ஏறத்தாழ நாலாயிரம் பாடல்களைக் கொண்டிருத்தலால் "நாலாயிரத்திவ்யப்பிரபந்தம்" என வழங்குகின்றது.

திவ்யப்பிரபந்தங்கள் வேதங்களுக்குச் சமமான சிறப்புடையன. நம்மாழ்வார் அருளிச் செய்த திருவிருத்தம் இருக்குவேதம். திருவாசிரியம் எசுர்வேதம், பெரிய திருவந்தாதி